Paristamil Navigation Paristamil advert login

ஒரே போட்டியில் 2 சாதனைகளை படைத்த புவனேஷ்வர் குமார்

ஒரே போட்டியில் 2 சாதனைகளை படைத்த புவனேஷ்வர் குமார்

2 வைகாசி 2026 சனி 16:11 | பார்வைகள் : 122


GT அணிக்கு எதிரான போட்டியில், RCB வீரர் புவனேஷ்வர் குமார் இரு வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

2026 ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில், குஜராத் டைட்டன்ஸ்(GT) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்(RCB) அணிகள் மோதியது.

முதலில் துடுப்பாட்டம் ஆடிய RCB அணி, 20 ஓவர்கள் முடிவில் 19.2 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்கள் குவித்தது.

அதைத்தொடர்ந்து 156 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய GT அணி, 15.5 ஓவர்கள் முடிவில் 158 ஓட்டங்கள் குவித்தது.

இதன் மூலம், GT அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேற்றைய போட்டியில் 3 விக்கெட்களை கைப்பற்றிய RCB அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் இரு வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

இதன் மூலம் T20 கிரிக்கெட்டில் 350 விக்கெட்டுகளை கடந்த முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை புவனேஷ்வர் குமார் பெற்றுள்ளார்.

T20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியர்களின் பட்டியலில் சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திர சாஹல் முதலிடத்தில் உள்ளார்.

இதே போல், இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் 200 விக்கெட்களை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையையும் புவனேஷ்வர் குமார் படைத்துள்ளார். புவனேஷ்வர் குமார் 15 ஐபிஎல் போட்டிகளை, ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாடியுள்ளார்.

யுவேந்திர சாஹல் 186 விக்கெட்களுடன் இந்த பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார்.