மெக்சிகோவில் கோர விபத்து - 11 பேர் பலி
2 வைகாசி 2026 சனி 13:53 | பார்வைகள் : 2277
மெக்சிகோவின் மேற்கு நயாரிட் மாகாணத்தில் 01.05.2026 சுற்றுலாப் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில், 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 31 பேர் காயமடைந்துள்ளனர்.
ஜலிஸ்கோ மாகாணத்திலிருந்து அமாட்லான் டி கானாஸ் நகரை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நயாரிட்டில் உள்ள பொழுதுபோக்கு மையம் ஒன்றிற்குச் சென்று கொண்டிருந்ததாக பேருந்து ஒன்று நெடுஞ்சாலையிலிருந்து விலகி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளனதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நயாரிட் மற்றும் ஜலிஸ்கோ மாகாணங்களைச் சேர்ந்த அவசர கால நிவாரணக் குழுக்கள் உடனடியாகச் செயல்பட்டு மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
விபத்துக்கான காரணத்தைக் கண்டறிவதற்கும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அப்பகுதி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan