Shein, Temu, AliExpress பொருட்களில் 46% ஆபத்தானவை: DGCCRF எச்சரிக்கை!!
1 வைகாசி 2026 வெள்ளி 21:11 | பார்வைகள் : 3720
Shein, Temu, AliExpress போன்ற வெளிநாட்டு ஆன்லைன் விற்பனை தளங்களில் வாங்கும் பொருட்களில் பல ஆபத்துகள் உள்ளன என்று DGCCRF (போட்டி, நுகர்வு மற்றும் மோசடி தடுப்பு பொது இயக்கம்) எச்சரித்துள்ளது. நுகர்வோர் இந்த தளங்களில் பொருட்கள் வாங்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அது அறிவுறுத்துகிறது.
DGCCRF வெளியிட்ட அறிக்கையின்படி, சோதிக்கப்பட்ட பொருட்களில் 75% சட்டத்திற்கு இணங்காதவை மற்றும் 46% ஆபத்தானவை என கண்டறியப்பட்டது. 100,000-க்கும் மேற்பட்ட பொருட்கள் விற்பனையிலிருந்து திரும்ப பெறப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மொத்தம் 650 பொருட்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. சோதனையில், சில உடைகள் மற்றும் நகைகளில் கேட்மியம் போன்ற விஷப்பொருட்கள் இருந்தன. சில விளையாட்டு பொருட்கள் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தன. பேட்டரிகள் எளிதில் அணுகக்கூடியதால் குழந்தைகள் அதை விழுங்கும் அபாயமும் உள்ளது.
மேலும் மின்சாதனங்களில், குறிப்பாக முடி அலங்கார சாதனங்களில் (sèche-cheveux ou des lisseurs) தீ விபத்து அபாயம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த நிலையை சமாளிக்க, அரசு “VigE-commerce” என்ற புதிய கண்காணிப்பு குழுவை அமைத்துள்ளது. இதேவேளை, Temu நிறுவனம் தனது பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், எதிர்காலத்தில் முதலீட்டை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan