மொபைலில் தேர்தல் முடிவுகள்: தேர்தல் கமிஷன் ஏற்பாடு
2 வைகாசி 2026 சனி 13:40 | பார்வைகள் : 1856
சட்டசபை தேர்தல் முடிவுகளை, மொபைல் செயலி வாயிலாக உடனுக்குடன் பொதுமக்களுக்கு தெரிவிக்க, தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி, அசாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நிறைவடைந்து, வரும் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது. அன்று காலை 8:00 மணிக்கு, ஓட்டு எண்ணிக்கை துவங்குகிறது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். அதன்பின் ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படும்.
தேர்தல் முடிவுகள் தொடர்பான விபரங்கள், முன்பு தேர்தல் கமிஷன் இணையதளத்தில் மட்டும் வெளியானது. இம்முறை, தேர்தல் கமிஷனின் 'ECINET' என்ற மொபைல் செயலியிலும், முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. மாநில வாரியாக, தொகுதிகள் வாரியாக, உடனுக்குடன் முன்னணி நிலவரங்கள் வெளியிடப்பட உள்ளன. மொபைல் செயலியில், மாநில, மாவட்ட வாரியாக ஓட்டுப்பதிவு சதவீதம் ஏற்கனவே வெளியிடப்பட்டது






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan