தேர்தல்களுக்கும், எரிபொருள் விலைக்கும் தொடர்பில்லை; மத்திய அமைச்சர்
2 வைகாசி 2026 சனி 12:57 | பார்வைகள் : 119
எரிபொருள் விலைக்கும் தேர்தல்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என்று மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெளிவுபடுத்தினார்.
குஜராத் மாநிலத்தில் நடந்த மாநாட்டில், ஹர்தீப் சிங் பூரி பேசியதாவது: இந்தியா சமையலறைகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட அனுமதிக்கவில்லை. நாங்கள்சில்லறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றத்தை கொண்டு வரவில்லை. பீதியைக் கொள்கையாக மாற நாங்கள் அனுமதிக்கவில்லை.
தேர்தல் இருப்பதால் விலைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறோம் என்று எங்கள் சகாக்கள் பலர் கூறுகிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் நாம் பல தேர்தல்களைச் சந்தித்துள்ளோம். எரிபொருள் விலைகளுக்கும் தேர்தல்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
நேரம் வரும்போது, அரசு தேவையான முடிவுகளை எடுக்கும். ஆனால் 33 கோடி வீடுகளுக்குக் குழாய் மூலம் எரிவாயு கிடைப்பதை உறுதி செய்வதே பிரதமரின் திட்டமாகும். கச்சா எண்ணெய் கொள்முதல் இப்போது 27 நாடுகளில் இருந்து 41 நாடுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளைத் தவிர, அமெரிக்கா, நார்வே, அல்ஜீரியா ஆகிய நாடுகளில் இருந்தும் நாங்கள் எல்பிஜி கொள்முதல் செய்யத் தொடங்கினோம்.
இந்தியா பெரும் வேகத்துடன் செயல்பட்டது; சுத்திகரிப்பு நிலையங்களில் எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்க ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன, மேலும் நாங்கள் எங்கள் உள்நாட்டு உற்பத்தியை 60% அதிகரித்தோம். மேற்கு ஆசிய மோதலைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி விலைகள் உயர்ந்தபோதும், மத்திய அரசு எரிபொருள் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்படாமல் நடவடிக்கை எடுத்தது.
அதிக எண்ணிக்கையிலான எல்பிஜி ஏற்றி வந்த இந்தியக் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டது. இவ்வாறு ஹர்தீப் சிங் பூரி பேசினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan