கருத்துக்கணிப்பு எல்லாம் பிசினஸ்; எம்பி கார்த்தி
2 வைகாசி 2026 சனி 07:19 | பார்வைகள் : 218
தேர்தல் கருத்துக்கணிப்புகளை எல்லாம் சீரியஸாகவே நான் எடுத்துக் கொள்வதில்லை. அவையெல்லாம் பிசினஸ் ஆகிவிட்டன என காங்கிரஸ் எம்பி கார்த்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து நிருபர்களிடம் காங்கிரஸ் எம்பி கார்த்தி கூறியதாவது:
தேர்தல் கருத்துக்கணிப்புகளை எல்லாம் சீரியஸாகவே நான் எடுத்துக் கொள்வதில்லை. அவையெல்லாம் பிசினஸ் ஆகிவிட்டன. வரும் 4ம் தேதி, 75 ஆயிரம் பூத்களிலும் பதிவான ஓட்டுகளை எண்ணிப் பார்த்தால் தான், தேர்தலில் யார் ஜெயிக்கிறார்கள் என்று தெரியும்.
எல்லா கட்சிகளும், எல்லா கூட்டணியும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் தான் உள்ளன. தேர்தல் முடிவுக்கு பின் பார்ப்போம். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. காங்கிரஸ், உயிரோட்டமான கட்சி; தலைமை பொறுப்பில் அமர, தகுதியான நிறைய தலைவர்கள் உள்ளனர். இவ்வாறு கார்த்தி கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan