தேர்தல் முடிவுகளில் தவெக ஆச்சர்யத்தை ஏற்படுத்தலாம்: வைகோ
2 வைகாசி 2026 சனி 05:14 | பார்வைகள் : 1533
தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது தவெக பல ஆச்சர்யத்தை ஏற்படுத்தலாம் என என மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு வைகோ அளித்த பேட்டி:
தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள் அனைத்தும் ஒரே மாதிரி வரவில்லை. நான்கு முடிவுகள் திமுக ஆட்சிஅமைக்கும் எனவும், ஒரு முடிவு அதிமுக ஆட்சி அமைக்கும் எனவும், மறறொன்று தவெக ஆட்சிக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது. இன்னும் பல கருத்துக்கணிப்புகள் உள்ளன. ஆனால், ஒவ்வொன்றில் இருந்து மற்றொன்று மாறுபடுகிறது. நாம் பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.
விஜய் தலைமையிலான தவெக வலிமையான சக்தியாக திகழ்வதுடன், தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது பல ஆச்சர்யங்களை ஏற்படுத்தக்கூடும். மாணவர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் மத்தியில் தவெகவுக்கு மிகப்பெரிய ஆதரவு உள்ளது.
பல தியாகங்கள் மூலம் திராவிட இயக்கம் கட்டமைக்கப்பட்டது. திராவிட இயக்கத்தை கொண்டு வருவதற்கு ஆயிரக்கணக்கானோர் தங்களது வாழ்க்கையை தியாகம் செய்துள்ளனர். தேர்தலில் வென்றாலும், தோற்றாலும் திராவிட மண்ணில் திராவிட இயக்கம் நிலையான சக்தியாக திகழும். பாஜ கனவு காண்பதை போல் திராவிட இயக்கத்தின் அடிமட்டத்தை அசைக்க முடியாது.
கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும் வெற்றி பெற முயற்சி செய்கின்றனர். கேரளாவில் அது மிகப்பெரிய கடினம். முடியாது. ஆனால், மேற்கு வங்கத்தில், அங்கு வேறு மாதிரியாக உள்ளது. இவ்வாறு வைகோ கூறினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan