கிரேட்டர் நிக்கோபார் திட்டத்திற்கு ராகுல் எதிர்ப்பு: முன்னாள் விமானப்படை தளபதி வியப்பு
1 வைகாசி 2026 வெள்ளி 08:52 | பார்வைகள் : 121
கிரேட்டர் நிக்கோபர் திட்டத்திற்கு காங்கிரஸ் எம்பி ராகுல் எதிர்ப்பு தெரிவிப்பது ஆச்சர்யமாக உள்ளது என தெரிவித்துள்ள விமானப்படை முன்னாள் தளபதி ஆர்கேஎஸ் பதவுரியா,இந்த பகுதியில் ராணுவரீதியிலான தடத்தை பதிப்பது முக்கியம். பாதுகாப்பு மற்றும் வியூகக் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது இந்த வளர்ச்சி முக்கியமானதாகும் என தெரிவித்துள்ளார்.
அந்தமான் - நிக்கோபர் தீவில் உள்ள நிக்கோபரில், 'கிரேட்டர் நிக்கோபர் திட்டம்' செயல்படுத்தப்பட உள்ளது.
மொத்தம் 81,000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தின் வாயிலாக, சர்வதேச கொள்கலன் முனையம், பயணியர் மற்றும் ராணுவ பயன்பாட்டுக்கான பசுமை விமான நிலையம், மின் உற்பத்தி நிலையம் மற்றும் புதிய நகரமைப்பு ஆகியவற்றை மத்திய அரசு அமைக்க உள்ளது.
மலாக்கா ஜலசந்தி போன்ற முக்கிய கப்பல் போக்குவரத்து பாதைகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள இந்த தீவின் அமைப்பை பயன்படுத்திக் கொள்வதன் மூலம், இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் இருப்பை வலுப்படுத்துவதையும், வெளிநாட்டு மறு ஏற்றுமதி மையங்களை சார்ந்திருப்பதை குறைக்கவுமே இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கடல்சார் வணிகம் மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டத்துக்கு, தொடக்கம் முதலே காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்பி ராகுல், ''நாட்டிலேயே இது மிகப்பெரிய ஊழல்,'' என குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக விமானப்படை முன்னாள் தலைவர் ஆர்கே சிங் பதவுரியா கூறியதாவது:
ராகுலின் அறிக்கை ஆச்சர்யம் அளித்தது. இந்த திட்டத்தை புரிந்து கொள்வது முக்கியம். இந்த பகுதியில் ராணுவரீதியிலான தடத்தை பதிப்பது முக்கியம். பாதுகாப்பு மற்றும் வியூகக் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது இந்த வளர்ச்சி முக்கியமானதாகும்.ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டபிறகு, ஜலசந்திகள் மற்றும் கடல் வழித்தடங்களை மிறப்பதன் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்தள்ளோம். இத்தகைய சூழலில், இப்படி ஒரு அறிக்கை ஆச்சர்யமளிக்கிறது.
அங்கு ஒரு துறைமுகம் அமைக்கப்பட்டால், அது மலாக்கா ஜலசந்தியில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவிலேயே அமைந்திருக்கும். சீனாவின் எரிசக்தி வர்த்தகத்தில் 75 சதவீதம் அந்த மலாக்கா ஜலசந்தியையே முக்கிய வழிப்பாதையாக திகழ்கிறது. இந்தியாவின் கடல் மற்றும் வான்வழி ஆதிக்கத்தை மிகக்கணிசமான அளவிற்கு நமது திட்டம் வலுப்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan