Paristamil Navigation Paristamil advert login

கருத்துக்கணிப்பின் பின்னணியில் பாஜ; மம்தா

கருத்துக்கணிப்பின் பின்னணியில் பாஜ;  மம்தா

1 வைகாசி 2026 வெள்ளி 06:14 | பார்வைகள் : 135


தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின் பின்னால் பாஜ இருக்கிறது என குற்றம்சாட்டி உள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைப்போம் என தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க சட்டசபைக்கு 2வது கட்ட தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் பாஜ ஆட்சியை கைப்பற்றும் எனக் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அம்மாநில முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி  சமுக வலைதள பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது: மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியே அமையும். கருத்துக்கணிப்புகளின் பின்னால் பாஜ உள்ளது. அக்கட்சியே நடத்தி உள்ளது. கருத்துக்கணிப்புகளை நிராகரிக்கிறோம். 226 தொகுதிகளுக்குமேல் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைப்போம்.

தாய், தாய்நாடு, மக்கள் என்ற கொள்கையில் ஆட்சி செய்வோம்.பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக மத்திய பாதுகாப்பு படையினர் மோசமாக நடந்து கொண்டனர். இவ்வாறு மம்தா பானர்ஜி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.