கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி - 6 ஏவுகணை திட்டம்; தயார் நிலையில் டி.ஆர்.டி.ஓ.,
1 வைகாசி 2026 வெள்ளி 05:14 | பார்வைகள் : 168
அக்னி ஏவுகணைகள் வரிசையில், நீண்ட தூரம் சென்று இலக்கை தாக்கும் திறன் கொண்ட, 'அக்னி - 6' ஏவுகணை திட்டத்தைத் தொடங்க தயார் நிலையில் இருக்கிறோம், மத்திய அரசு அனுமதி அளித்த உடன் திட்டம் தொடங்கப்படும்,” என ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ.,வின் தலைவர் சமீர் வி.காமத் தெரிவித்தார்.
நம் நாட்டின் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில், 'அக்னி' ஏவுகணைகள் மிக முக்கியமான மைல்கல். டி.ஆர்.டி.ஓ., நிறுவனம் இந்த ஏவுகணைகளை உருவாக்கி பராமரித்து வருகிறது. தொலைவு மற்றும் பயன்பாட்டைப் பொறுத்து அக்னி ஏவுகணைகள், அக்னி 1 முதல் 5 வரை வகைப்படுத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில், தனியார் செய்தி நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்த தேசிய பாதுகாப்பு உச்சி மாநாட்டில் டி.ஆர்.டி.ஓ., தலைவர் சமீர் வி.காமத் நேற்று பங்கேற்றார்.
அவர் பேசியதாவது: டி.ஆர்.டி.ஓ., தற்போது, 'ஹைப்பர்சோனிக் கிளைடு ஏவுகணை' மற்றும், 'ஹைப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை' என இரண்டு திட்டங்களில் பணியாற்றி வருகிறது. இதில், 'கிளைடு' ஏவுகணைத் திட்டம் தற்போது முன்னேறிய நிலையில் உள்ளது. விரைவில் முதல் கட்ட சோதனை நடத்த உள்ளோம்.
ஹைப்பர்சோனிக் குரூஸ்' ஏவுகணையில், 'ஸ்க்ராம்ஜெட்' இன்ஜின் பொருத்தப்பட்டு, அது பறக்கும் போதே ஆற்றல் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறுகிய தூர ஏவுகணையான, 'பிரளய்' தற்போது இறுதிக்கட்ட சோதனையில் உள்ளது. விரைவில் ராணுவத்தில் இணைக்கப்படும். 'அக்னி -- 6' ஏவுகணை திட்டத்தைத் தொடங்க மத்திய அரசு எப்போது அனுமதி வழங்குகிறதோ, அப்போது நாங்கள் இத்திட்டத்தைத் தொடங்க தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan