Paristamil Navigation Paristamil advert login

ரஷ்யாவில் நூற்றுக்கணக்கான நாய்கள் பலி

ரஷ்யாவில் நூற்றுக்கணக்கான நாய்கள்  பலி

30 சித்திரை 2026 வியாழன் 12:24 | பார்வைகள் : 180


ரஷ்யாவின் நிஸ்னி நோவ்கோரோட்வில் ஏற்பட்ட தீ விபத்தில் நூற்றுக்கணக்கான நாய்கள் உயிரிழந்தன.

ரஷ்யாவில் உள்ள நிஸ்னி நோவ்கோரோட் நகரில், விலங்குகள் வைக்கப்பட்டிருந்ததாகக் கருதப்படும் ஒரு வெளிக்கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனை அறிவித்த அவசரநிலை அமைச்சகம், தீ விபத்திற்கான காரணம் தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது. துரதிர்ஷ்டவசமாக நூற்றுக்கணக்கான நாய்கள் இதில் உயிரிழந்தன.

மேலும் பொமரேனியன், புல்டாக் மற்றும் சிஹுவாஹூவா உள்ளிட்ட சுமார் 200 நாய்களும் இந்த விபத்தில் உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுவதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

கட்டிடத்தின் உரிமையாளர் மற்றும் நாய் வளர்ப்பாளரான டாட்டியானா, கட்டிடத்தில் உள்ள லேமினேட் புகைந்து அடர்த்தியான புகையால் நிரம்பியதற்கு அடுப்பு காரணமாக இருந்திருக்கலாம் என்று ஊடகத்திடம் கூறியதாக தெரிய வந்துள்ளது.

மேலும், இந்த தீ விபத்து வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சமூக ஊடக யூகங்களை டாட்டியானாவின் அண்டை வீட்டுக்காரர்கள் நிராகரித்தினர்.