பலூன்களில் சமையல் எரிவாயுவை வாங்கும் பாகிஸ்தான் மக்கள்
29 சித்திரை 2026 புதன் 18:13 | பார்வைகள் : 118
எரிபொருள் தட்டுப்பாட்டால் பாகிஸ்தானில் பொதுமக்கள் பலூன்களில் சமையல் எரிவாயுவை வாங்கி செல்கின்றனர்.
ஈரான் மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போரில், போர் நிறுத்தம் ஏற்பட்டாலும், ஹார்மோஸ் நீரிணை சுமார் 2 மாத காலமாக முடக்கப்பட்டுள்ளது.
உலகின் 20% எண்ணெய் போக்குவரத்து இந்த பாதை வழியே நடைபெறுவதால், உலகின் பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.
பாகிஸ்தானில் எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க முன்னறிவிக்கப்பட்ட மின்வெட்டு, ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவது, இணைய வழிக்கல்வி என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இருப்பினும், சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக கராச்சி மக்கள் பிளாஸ்டிக் பலூன்களில் சமையல் எரிவாயுவை நிரப்பி தற்காலிகமாக சேமிக்கின்றனர்.
இந்த பலூன்கள், உள்ளூர் சந்தைகளில் சுமார் 1,000 ரூபாய் முதல் 1,500 வரை கிடைக்கும்.
குறிப்பாக அதிக மக்கள் அடர்த்தி கொண்ட பகுதிகளில், சிறிய உராய்வு, வெப்ப வெளிப்பாடு அல்லது ஒரு தீப்பொறி கூட வெடிப்பைத் தூண்டக்கூடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
வீடுகளுக்குள் இதுபோன்ற தற்காலிக சேமிப்பு அமைப்புகள் இருப்பது, தீ விபத்துகள் குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளதுடன், அதிகாரிகள் உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan