Paristamil Navigation Paristamil advert login

பெண்களுடன் பேசும்போது கூச்சமா? தயக்கத்தை போக்கும் எளிய வழிகள்

பெண்களுடன் பேசும்போது கூச்சமா? தயக்கத்தை போக்கும் எளிய வழிகள்

29 சித்திரை 2026 புதன் 16:02 | பார்வைகள் : 150


சிலர் பெண்களிடம் பேசும் போது மிகவும் பதற்றமாக காட்சியளிப்பார்கள். அதற்கு எதிரில் இருக்கும் நபர் எப்படி ரியாக்ட் செய்வார் என்பதே முக்கிய காரணமாகும்.  அதிகமாக சிந்திக்காமல் இயல்பான உரையாடலை மேற்கொண்டால் கூச்ச உணர்வை நிச்சயம் போக்கிவிட முடியும்

மனதிற்குள் ஆயிரம் எண்ணங்கள் ஓடினாலும், ஒரு பெண்ணின் முன்னால் நிற்கும்போது அவை அனைத்தும் காணாமல் போவதும், இதயம் படபடப்பதும் பல ஆண்களுக்கு நடக்கும் ஒரு எதார்த்தமான விஷயம்.

அவர் என்ன நினைப்பார்? நாம் பேசுவதை தவறாக எடுத்துகொள்வரா? போன்ற எண்ணங்கள்தான் நம்மை பேச விடாமல் தடுக்க செய்கிறது. உண்மையில், இந்த தயக்கத்தை தாண்டி நீங்கள் சொல்லும் சிறிய ஹலோ அல்லது புன்னகை கூட, நீண்ட கால உறவுக்கு சிறந்த அடித்தளமாக அமையலாம்
​Research Gate-ல் வெளியான ஆய்வறிக்கைபடி, நம்முடைய கவனம் குறிப்பிட்ட நபர் மீது திரும்பும்போது ஏற்படும் ஒருவித பயம், அழுத்தம் மற்றும் அசௌகரியமே கூச்சம் உணர்வு ஆகும். மனநிலை மட்டுமின்றி இதய துடிப்பு அதிகரித்தல், வியர்த்தல் அல்லது நடுக்கம் போன்ற உடல் ரீதியான மாற்றங்களும் ஏற்படும். புதிய நபர்களிடம் பேசும் போது, நம்மைக் குறித்து என்ன நினைப்பார்களோ என்று அளவுக்கு அதிகமாகக் கவலைப்படுவதே இதற்கு முக்கிய காரணம் என குறிப்பிட்டுள்ளது.

ஒரு சில விஷயங்களை பின்பற்றுவது மூலம் கூச்ச உணர்வை போக்கி பிறருடன் வெளிப்படையாக நிச்சயம் உரையாட முடியும்.

சிறிய உரையாடலுடன் தொடங்குங்கள்
முதல் சந்திப்பிலே நீண்ட நேரம் உரையாட வேண்டும் என நினைக்க வேண்டாம். சிறிய புன்னகை அல்லது ஹலோ எப்படி இருக்கீங்க போன்ற சிறிய வார்த்தையுடன் தொடங்குங்கள். அவரை கவர வேண்டும் என்கிற நோக்கில் மட்டும் அணுக வேண்டாம். இயல்பான உரையாடலை கொண்டிருங்கள்.

பாடி லாங்குவேஜ் முக்கியம்
வார்த்தைகளை விட பாடி லாங்குவேஜ் அதிக விஷயங்களை வெளிப்படுத்தும். எனவே, பெண்களுடன் பேசும்போது நேராக நின்று கண்களை பார்த்து பேசுவது மிகவும் முக்கியமாகும். இது நம்பிக்கையை அதிகரிக்கும். முகத்தில் புன்னகை கொண்டிருப்பது கூடுதல் பிளஸ் பாயிண்ட் ஆகும்

அதிகமாக சிந்திக்க வேண்டாம்
பேச ஆரம்பிப்பதற்கு முன்பே அதிகமாக சிந்திப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். மனதில் தோன்றும் எதார்த்தமான கருத்துகளை சொல்லுங்கள். உரையாடலை எளிமையாக வைத்திருங்கள். அதிகமாக சிந்தித்து பேசினால் உரையாடல் செயற்கையாக மாற அதிக வாய்ப்புள்ளது

நிராகரிப்பை தாங்கி கொள்வது அவசியம்
ஒருவேளை அந்த பெண் உங்களிடம் பேச ஆர்வம் காட்டவில்லை என்றால், அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருக்க வேண்டும். அதில் உங்க தவறு எதுவும் கிடையாது. எல்லோருக்கும் எல்லோரையும் பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அவரிடம் சிரித்த முகத்துடன் Bye சொல்லிவிட்டு அமைதியாக விலகி செல்லுங்கள்.

தோற்றத்தை மெருகேற்றவும்
இது வெறும் வெளிப்புற தோற்றம் மட்டுமல்ல உங்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் விஷயமாகும். சுத்தமான மற்றும் நேர்த்தியான ஆடை அணிவது, தலைமுடியை அழகாக வாரிக் கொள்வது, தாடியை சீராக வைத்திருப்பது, மிதமான நறுமணம் கொண்ட பெர்ஃப்யூம் பயன்படுத்துவது போன்றவை எதிரில் இருப்பவர்கள் முகம் சுழக்க மாட்டார் என்கிற நம்பிக்கையை அளிக்கும்.

பல ஆண்கள் நினைப்பது போல், பெண்கள் உங்களிடம் ஆடம்பரம் அல்லது மிக ஸ்டைலான பேச்சையோ எதிர்பார்ப்பதில்லை. நீங்கள் உண்மையை பேசுகிறீர்களா? மரியாதையுடன் நடத்துகிறீர்களா? நடிக்காமல் இருக்கிறீர்களா போன்ற விஷயங்களை மட்டுமே கவனிக்கிறார்கள்.

பேச்சு என்பது ஒரு தனி கலையாகும். யாராலும் முதல் முயற்சியிலே வல்லுநராக முடியாது. ஆனால், முறையான பயிற்சி எடுத்தால் நிச்சயம் கூச்ச உணர்வை போக்கி சரளமாக பேச முடியும். தனியாக இருக்கும்போது கண்ணாடியை பார்த்துப் பேசுவதும் உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவும்.