இந்தியா வருகிறது இன்னொரு சுதர்சன சக்கரம்!
29 சித்திரை 2026 புதன் 07:14 | பார்வைகள் : 104
இந்தியாவிற்கு வழங்க வேண்டிய 4வது எஸ் 400 வான் பாதுகாப்பு கவச வாகனத்தை ரஷ்யா அனுப்பி வைத்துள்ளது. இது மே மாத மத்தியில் இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்ய வடிவமைத்துள்ள எஸ் 400 அதிநவீன வான் பாதுகாப்பு கவச வாகனம் இந்தியாவின் சுதர்சன சக்கரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த வாகனம் 600 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து வரும் ஏவுகணைகளை கண்காணிக்கும். 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை இடைமறித்து அழிக்கவும் முடியும். உலக நாடுகள் வைத்துள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளில் மிகவும் துல்லியமாக செயல்படக்கூடியது இந்த எஸ் 400 அமைப்பு.
இதன் செயல்பாடுகளை ஆராய்ந்த இந்தியா, 2018 ம் ஆண்டில் ஐந்து எண்ணிக்கையில் எஸ் 400 வான் பாதுகாப்பு கவச வாகனங்களை வாங்க ஒப்பந்தம் செய்தது. இதன் மொத்த மதிப்பு 40 ஆயிரம் கோடி ரூபாய். முழுத்தொகையையும் இந்தியா செலுத்திவிட்டது. இதுவரை ரஷ்யா 3 எண்ணிக்கையில் மட்டுமே எஸ் 400 வான் பாதுகாப்பு கவச வாகனங்களை வழங்கி உள்ளது.இந்த மூன்றும் பாகிஸ்தான் மற்றும் சீன எல்லையில் நிறுவப்பட்டு உள்ளன. கடந்தாண்டு நடந்த ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது, இந்த வான் பாதுகாப்பு கவச வாகனம் சிறப்பாக செயல்பட்டது. பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் ஆகியவற்றை இடைமறித்து தாக்கி துவம்சம் செய்தது.
இதன் நன்மைகளை உணர்ந்த மத்திய அரசு, உடனடியாக மீதமுள்ள இரண்டு வான் பாதுகாப்பு அமைப்புகளையும் வழங்க வேண்டும் என்று ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுத்தது. அதை ஏற்ற ரஷ்யா, விரைவில் வழங்குவதாக உறுதி அளித்து இருந்தது.
இந்நிலையில் நான்காவது எஸ் 400 வான் பாதுகாப்பு கவச வாகனத்தை இந்தியாவிற்கு அனுப்பி வைத்துள்ளது. இது அடுத்த மாதம் மத்தியில் இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 18 ம் தேதி கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட இந்த பாதுகாப்பு கவச வாகனத்தை ராஜஸ்தான் எல்லையில் நிறுத்தி வைக்க இந்திய விமானப்படை முடிவு செய்துள்ளது. ஐந்தாவது எஸ் 400 வான் பாதுகாப்பு கவச வாகனத்தை நவம்பர் மாதத்திற்குள் ரஷ்யா அனுப்பி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது



திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

Ajouter
Annuaire
Scan