சென்னையில் இருந்து பெங்களூரு; புல்லட் ரயில் திட்டம் அறிவித்தது மத்திய அரசு
29 சித்திரை 2026 புதன் 05:14 | பார்வைகள் : 165
சென்னையில் இருந்து பெங்களுருவுக்கு வெறும் 73 நிமிட பயணத்தில் செல்லும் வகையிலான நாட்டின் 2வது புல்லட் ரயில் திட்டம் விரைவில் தொடங்கும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறி உள்ளார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நாட்டின் மிக பெரிய ஏஐ டேட்டா மையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் மத்திய மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அப்போது பேசிய அவர், தென்னிந்தியாவில் அதி வேக புல்லட் ரயில் திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார்.
அஸ்வினி வைஷ்ணவ் மேலும் கூறி இருப்பதாவது;
புல்லட் ரயில் சேவை, நமது பயண நேரத்தை வெகுவாக குறைத்து, முக்கிய நகரங்களை கொண்ட ஒரு ஒருங்கிணைந்த பொருளாதார மண்டலத்தை உருவாக்கும். இந்த அதிவேக ரயில் நெட்வொர்க்கானது, அமராவதி, ஹைதராபாத், சென்னை, பெங்களூரு, புனே மற்றும் மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களை இணைத்து, முக்கிய முன்னேற்றங்களை கொண்டு வரும்.
புல்லட் ரயில் மூலம் அமராவதி-iஹைதராபாத் இடையேயான பயண நேரம் 70 நிமிடங்களாக குறைக்கப்படும். அதே நேரம் அமராவதி-சென்னை பயண தூரம் 112 நிமிடங்களாக ஆக்கப்படும். ஹைதராபாத்-புனே 1 மணி நேரம் 55 நிமிடங்கள், புனே-மும்பை 48 நிமிடங்கள், சென்னை-பெங்களூரு 73 நிமிடங்கள், ஹைதராபாத்-பெங்களூரு 2 மணிநேரம் 8 நிமிடங்கள் பயண தூரம் இருக்கும். சென்னை - பெங்களூரு திட்டம் விரைவில் தொடங்கப்படும்.
புல்லட் ரயில் நம் அனைவரின் கனவுத்திட்டம். ஆமதாபாத்-மும்பை இடையேயான 500 கிலோ மீட்டர் பயணம் 1 மணி நேரம் 57 நிமிடங்களில் இருக்கும். மும்பை, சூரத், வாபி, பரோடா, ஆமதாபாத் ஆகிய அனைத்து பெரிய நகரங்களும் ஒரே பொருளாதார மண்டலமாக மாறும். \u003cbr\u003e\u003cbr\u003eஇதே அதிசயம், இப்போது ஆந்திராவில் இருந்தும் நிகழும். அமராவதி-ஹைதரபாத் இடையே 70 நிமிடங்களில் பயணம் இருக்கும். நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தென்கடற்கரை ரயில்வே மண்டலம் ஜூன் 1ம் தேதியன்று அறிவிக்கப்படும். கொல்கட்டாவில் இருந்து சென்னை செல்ல தற்போதுள்ள இரட்டை ரயில் பாதை நான்காக தரம் உயர்த்தப்படும். \u003cbr\u003e\u003cbr\u003eஇவ்வாறு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசினார்.



திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

Ajouter
Annuaire
Scan