இந்திய அணிக்கு எதிரான தொடரைக் கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா
28 சித்திரை 2026 செவ்வாய் 11:35 | பார்வைகள் : 236
இந்திய மகளிர் அணிக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.
தென் ஆப்பிரிக்கா, இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையிலான 5வது டி20 போட்டி பெனோனியில் நடந்தது.
முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ஓட்டங்கள் எடுத்தது. அணித்தலைவர் லௌரா வோல்வார்ட் 92 (56) ஓட்டங்கள் விளாசினார்.
ரேணுகா சிங் தாகூர், ஸ்ரீசரணி மற்றும் தீப்தி ஷர்மா தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
பின்னர் ஆடிய இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ஓட்டங்களே எடுத்ததால், தென் ஆப்பிரிக்கா 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணியில் அதிகபட்சமாக பார்தி ஃபுல்மலி 40 ஓட்டங்களும், ரிச்சா கோஷ் 25 ஓட்டங்களும் எடுத்தனர். மாபா, நாடினே டி க்ளெர்க் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
தென் ஆப்பிரிக்கா அணி இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.



திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

Ajouter
Annuaire
Scan