Paristamil Navigation Paristamil advert login

இந்திய பொருட்களுக்கு இனி நியூசிலாந்தில் வரியில்லை: கையெழுத்தானது வர்த்தக ஒப்பந்தம்

இந்திய பொருட்களுக்கு இனி நியூசிலாந்தில் வரியில்லை: கையெழுத்தானது வர்த்தக ஒப்பந்தம்

28 சித்திரை 2026 செவ்வாய் 05:14 | பார்வைகள் : 337


இந்தியா நியூசிலாந்து  இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்திற்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இந்தியா நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள 2025 ம் ஆண்டு மார்ச் மாதம்  பேச்சுவார்த்தை துவங்கி, 2025ம் ஆண்டு டிசம்பரில் பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக நியூசிலாந்து வர்த்தகத்துறை அமைச்சர்  டாட் மெக்கிளே தலைமையிலான குழுவினர்  இந்தியா வந்தனர்.

இன்று மதியம் இருநாடுகளுக்கு இடையிலான   தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்தியா சார்பில் மத்திய அமைச்சர்  பீயூஷ் கோயல் மற்றும் நியூசிலாந்து அமைச்சர் டாட் மெக்கிளே ஆகியோர் கையெழுத்து போட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின்படி, அனைத்துவகையான இந்திய பொருட்களுக்கும்  நியூசிலாந்தில் இறக்குமதி வரி பூஜ்ஜியமாக்கப்படும்.

நியூசிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும்மரத்துண்டுகள், வைன், அவகோடா, புளூபெர்ரி, பழங்கள் உள்ளிட்ட 895 சதவீத பொருட்களுக்கு நம் நாட்டில் வரி குறைக்கப்படும். அல்லது பூஜ்ஜியம் ஆக்கப்படும். பால் மற்றும்  அதனை சார்ந்த பொருட்களுக்கு வரிச்சலுகை கிடையாது. இந்திய மாணவர்களுக்கு 5 ஆயிரம் நியூசிலாந்து விசா வழங்கப்படும். அடுத்த 15 ஆண்டுகளில் 1.86 லட்சம் கோடி ரூபாய் அந்திய முதலீடு இந்தியாவுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய அம்சங்கள்

* இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததும், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100 சதவீத வரி விலக்கு  கிடைக்கும்
* இந்தியாவின் ஏற்றுமதி திறன் அதிகரிப்பு காரணமாக, விவசாயிகள், சிறுகுறுதொழில் நிறுவனங்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள்,  கைவினைக் கலைஞர்கள், பெண்கள்  ஆகியோர் பலன்பெறுவார்கள்.
* இந்தியாவிற்கு 1.86 லட்சம் கோடி  அந்நிய முதலீடு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக உற்பத்தி, உள்கட்டமைப்பு, சேவை, புதுமை மற்றும் வேலைவாய்ப்பு  உருவாக்குதல் ஆகிய துறை ஆகியவற்றுக்கு ஊக்கம் கிடைக்கும்.

வரி விலக்கு

*தோலால் செய்யப்பட்ட காலணிகள்
* பைகள்
*பெல்ட்கள்,  அலங்கார பொருட்கள்,
* வாலட்கள் மீதான வரி 5 % ல் இருந்து  பூஜ்ஜியம் ஆக குறைப்பு
*ரெடிமேட் ஆடைகள்,  இரவில் அணியும் ஆடைகள்
*டவல், விரிப்புகள்
*பைபர் மற்றும் தொழில்நுட்ப டெக்ஸ்டைல்
*பாரம்பரிய ஜவுளிகள் மற்றும் கைவினை தயாரிப்புகளுக்கான வரி 10 ல் இருந்து பூஜ்ஜியம் ஆக குறைப்பு
*பழங்கல், காய்கறிகள்,   தோட்டக்கலை பொருட்கள்\
*காபி, கொக்கோ, மசாலா பொருட்கள்
*தானியங்கள்,
*பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் மீதான  வரி 5 ல் இருந்து பூஜ்ஜியம் ஆக குறைப்பு

இதனால், விவசாயிகள் வருமானம் அதிகரித்து அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும்

*ஆட்டோமொபைல் மற்றும் அது சார்ந்த உதிரி பாகங்கள்
*மின்னணு பொருட்கள் உற்பத்தி
*மதிப்பு கூட்டப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் தயாரிப்புகள்
*ரசாயன தொழில்துறை மீதான வரியும் பூஜ்ஜியம் ஆக்கப்பட்டு உள்ளது.
*மருந்துத்துறை மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு   விரைவாக ஒப்புதல்  அளிக்கப்படும். இதனால், மேக் இன் இந்தியா திட்டம ஊக்கம் பெறும்.

பிரதமர் மகிழ்ச்சி

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியா  நியூசிலாந்து இடையிலான உறவில் இன்று ஒரு மைல்கல். இன்று கையெழுத்தான இந்தியா நியூசிலாந்து இடையிலான வர்த்தக ஒப்பந்தம்,  நமது வளர்ச்சிக்கு முன்எப்போதும்  இல்லாத வகையில் உத்வேகம் அளிக்கும்.  இது நமது இரு நாடுகளையும் பிணைக்கும் ஆழ்ந்த நம்பிக்கை, பகிரப்பட்ட மாண்புகள் மற்றும் லட்சியத்தை பிரதிபலிக்கிறது. இந்த ஒப்பந்தம் நமது விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், கைவினை கலைஞர்கள், புத்தொழில் நிறுவனங்கள், மாணவர்களுக்கு பெரிதும் பயனளிக்கும். இது வளர்சசிக்கு புதிய வழிகளைத் திறந்து விடும்.  புதிய வாய்ப்புகளை உருவாக்கி பல்வேறு துறைகளில் நமது ஒருங்கிணைப்பை ஆழப்படுத்தும்.  நியூசிலாந்தின் 1.86 லட்சம் கோடி ரூபாய் முதலீடு என்பது விவசாயம், உற்பத்தி, புத்தகாக்கம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் நமது ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும். இரு நாடுகளும் வளமான மற்றும் ஆற்றல் மிக்க எதிர்காலத்திற்கு வழிவகுக்கும்.  இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்