வளி மாசடைவு - நாளை பரிசுக்குள் இலவச வாகன தரிப்பிடங்கள் (stationnement)

5 புரட்டாசி 2023 செவ்வாய் 17:22 | பார்வைகள் : 9734
தலைநகர் பரிசில் வளிமாசடைவு அதிகரித்துள்ளதை அடுத்து, பரிசில் சில வாகன தரிப்பிடங்கள் இலவசமாக்கப்பட்டுள்ளன.
நாளை புதன்கிழமை காலை முதல் மாலை வரை இலவச தரிப்பிடங்களை பயன்படுத்த முடியும் எனவும், முடிந்தவரை பொது போக்குவரத்துக்களை பயன்படுத்தும்படியும் கோரப்பட்டுள்ளது.
தலைநகர் பரிஸ் மற்றும் இல் து பிரான்சின் பெரும்பகுதியின் வளிமண்டலம் பெரும் மாசடைவைச் சந்தித்துள்ளது. அதையடுத்தே இந்த இலவச தரிப்பிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, வீதிகளில் அதிகபட்ச வேகம் 20 கி.மீ வேகத்தினால் குறைக்கப்பட்டுள்ளது.