யாழில் கோர விபத்தில் அண்ணன், தங்கை உயிரிழப்பு
17 பங்குனி 2026 செவ்வாய் 13:26 | பார்வைகள் : 1621
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் அண்ணனும் தங்கையும் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாண தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்புத்துறை வீதியில், நெடுங்குளம் சந்திக்கு அருகில் மார்ச் 916) இரவு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புத்துறை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், எதிரே வந்த டிராக்டருடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.
இந்த விபத்தில் யாழ்ப்பாணம் மாணியம்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ரொபின்சன் டட்னி (24 வயது - அண்ணன்) ரொபின்சன் டில்ஷிகா (19 வயது - தங்கை) இருவர் உயிரிழந்துள்ளனர்:
விபத்தில் பலத்த காயமடைந்த இருவரும் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.
விபத்து தொடர்பாக டிராக்டர் ஓட்டுநரை யாழ்ப்பாணப் பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan