Paristamil Navigation Paristamil advert login

வார இறுதியில் தடைப்படும் RER B,C,D,E மற்றும் மெட்ரோகள்!!

வார இறுதியில் தடைப்படும் RER B,C,D,E மற்றும் மெட்ரோகள்!!

16 பங்குனி 2026 திங்கள் 22:28 | பார்வைகள் : 535


மார்ச் 21 சனி மற்றும் மார்ச் 22 ஞாயிறு ஆகிய நாட்களில் தொடருந்து வலையமைப்பை நவீனப்படுத்தும் பணிகள் நடைபெறுவதால், Gare-du-Nord மற்றும் Aéroport-Charles-de-Gaulle 2 / Mitry-Claye நிலையங்களுக்கு இடையில் இரு திசைகளிலும் RER B ரயில் சேவை முழு நாளும் நிறுத்தப்படும். அதற்குப் பதிலாக மாற்றுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

Roissy (Charles-de-Gaulle விமான நிலையம்) செல்ல வேண்டிய பயணிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு மாற்று வழிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கடந்த சில வாரங்களாக இருந்தபடி, ஏப்ரல் 3 வரை ஒவ்வொரு இரவும் இரவு 22:45 மணி முதல் Châtelet – Les Halles மற்றும் Aéroport-Charles-de-Gaulle 2-TGV / Mitry-Claye இடையே ரயில் சேவை நிறுத்தப்படுகிறது.

மற்ற போக்குவரத்து வழிகளுக்கும் கடினமான வாரம்

Île-de-France பகுதியில் பல பாதைகள் ஒரே நேரத்தில் பாதிக்கப்படுகின்றன.

மெட்ரோ Line 12: ஏப்ரல் 12 வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 22:00 மணிக்குப் பிறகு சேவைகள் இருக்காது. சில புதன் மற்றும் வியாழன் நாட்களிலும் பணிகள் நடக்கின்றன.

மெட்ரோ Line 14: மார்ச் 18 புதன்கிழமை இரவு 22:00 மணிக்கு பிறகு சேவைகள் இயங்காது.

RER ரயில்களில்:

RER C: அடுத்த சில வாரங்களில் பல பகுதிகளில் மாலை நேரங்களில் பல தடைகள் எதிர்பார்க்கலாம்.

RER D: திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 23:00 மணிக்குப் பிறகு போக்குவரத்து தடைப்படும்

Gare-de-Lyon மற்றும் Melun / Corbeil-Essonnes இடையே சேவை நிறுத்தம். இந்த வார இறுதியில் Corbeil-Essonnes மற்றும் Melun இடையிலும் சேவை இல்லை.

RER E: வார நாட்களில் இரவு 22:45 மணிக்குப் பிறகு Nanterre-La-Folie மற்றும் Chelles-Gournay இடையே சேவைகள் இயங்காது. மேலும் மார்ச் 21 மற்றும் 22 அன்று இரவு 22:30 மணிக்குப் பிறகு Tournan மற்றும் Nanterre-La-Folie இடையிலும் போக்குவரத்து தடைப்படும்.

இந்த பல தடைகள் காரணமாக, Île-de-France Mobilités பயணிகள் இந்த வார இறுதியில் பயணம் செய்யும் முன் SNCF Connect அல்லது Île-de-France Mobilités செயலிகளைப் பயன்படுத்தி தகவலை சரிபார்க்குமாறு பரிந்துரைக்கிறது.