2026 நகராட்சி தேர்தல் தோல்விக்கு பிறகு மேயர் மரணம்: தற்கொலை சந்தேகம்!!
16 பங்குனி 2026 திங்கள் 16:48 | பார்வைகள் : 635
பைரினீஸ்-அட்லாண்டிக் (Pyrénées-Atlantiques) பகுதியில் உள்ள Viodos-Abense-de-Bas நகரின் 62 வயதான மேயர் கிரிஸ்தியன் பெர்சாய்ட்ஸ்(Christian Berçaïts) திங்கள்கிழமை காலை தனது வீட்டில் மரணமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
நகராட்சி தேர்தலில் தோல்வியடைந்ததற்கு அடுத்த நாளே இந்த சம்பவம் நடந்தது. இந்த தகவலை போ (Pau) நகர அரசுத் தரப்பு வழக்கறிஞர் ரோடோல்ஃப் ஜாரி உறுதிப்படுத்தினார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் அவரிடமிருந்து எந்த தகவலும் கிடைக்காததால், அவரது குடும்பத்தினர் கவலைப்பட்டு அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதன் பிறகு Mauléon-Licharre ஜொந்தாமினர் திங்கள்கிழமை காலை அவரது உடலை கண்டுபிடித்தனர்.
மரணத்தின் காரணத்தை அறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது; தற்கொலை என்ற கோணம் தற்போது முக்கியமாக கருதப்படுகிறது. 2017 முதல் மேயராக இருந்த கிரிஸ்தியன் பெர்சாய்ட்ஸ், இந்த ஆண்டு மீண்டும் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் முதல் சுற்றிலேயே அவர் 44.5% வாக்குகள் மட்டுமே பெற்று, அவரது எதிரணி ஹெர்வே மூட்ரூஸ் (Hervé Moutrous) 55.6% வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.
கிரிஸ்தியன் பெர்சாய்ட்ஸ் 2017 ஆம் ஆண்டின் இறுதியில் மேயராக ஆனார். அதற்கு முன்பு பதவி வகித்த பியர் ஸுயெஸ்கன் (Pierre Suescun) நவம்பர் மாதத்தில் திடீரென தற்கொலை செய்துகொண்டதையடுத்து அவர் அந்தப் பொறுப்பை ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan