Paristamil Navigation Paristamil advert login

சட்டசபை தேர்தல்: 4 மாவட்ட எஸ்.பி.க்கள் அதிரடி மாற்றம்

சட்டசபை தேர்தல்: 4 மாவட்ட எஸ்.பி.க்கள் அதிரடி மாற்றம்

17 பங்குனி 2026 செவ்வாய் 08:15 | பார்வைகள் : 1172


தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன.  

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதேவேளை, தேர்தல் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.  .இந்நிலையில், தமிழக சட்டசபை தேர்தலையொட்டி 4 மாவட்ட எஸ்.பி.க்களை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, கரூர், ஈரோடு, நாகை, விருதுநகர் மாவட்ட எஸ்.பி.க்களை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த மாவட்டங்களுக்கு புதிய எஸ்.பி.க்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, கரூர் எஸ்.பி.யாக ஹரிகிரண் பிரசாத், ஈரோடு எஸ்.பி.யாக கிரண் ஸ்ருதி, நாகை எஸ்.பி.யாக சுர்ஜித் குமார், விருதுநகர் எஸ்.பி.யாக ஸ்ரீநாதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்