இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்க ஈரான் எப்படி அனுமதித்தது? ஜெய்சங்கர்
17 பங்குனி 2026 செவ்வாய் 05:14 | பார்வைகள் : 902
போர் நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்க ஈரான் எப்படி அனுமதித்தது? என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேட்டி அளித்துள்ளார்.
மேற்கு ஆசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. பதிலுக்கு ஈரான் அப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்களை குறி வைத்து தாக்கி வருகிறது. மேலும், சர்வதேச கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு செல்லும் கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளது. அவ்வழியாக பயணிக்கும் கப்பல்களை தாக்குவோம் என எச்சரித்துள்ளது.
நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியை தொடர்பு கொண்டு பேசினார். இதையடுத்து, இந்திய கப்பல் கழகத்துக்கு சொந்தமான, 'ஷிவாலிக்' மற்றும் 'நந்தா தேவி' கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாக கடந்தன.
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்க ஈரான் எப்படி அனுமதித்தது? குறித்து ஆங்கில செய்தி சேனலுக்கு ஜெய்சங்கர் அளித்த பேட்டி: ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்திய கப்பல்களை கடந்து செல்வதற்கு ஈரானுடன் இந்தியா எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை.
ஈரான் போரின் போது பல நாடுகளின் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கித் தவிக்கும் அதே வேளையில், ஈரானுடனான இந்தியாவின் நேரடி உறவு, நமது கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பாதுகாப்பாக பயணிக்க உதவியுள்ளது.
இவை இன்னும் ஆரம்பம் தான். இன்னும் பல கப்பல்கள் கடப்பதற்காக காத்திருக்கின்றன. எனவே இது வரவேற்கத்தக்க முன்னேற்றம் என்றாலும், அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நான் தற்போது அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். நாங்கள் சில முடிவுகளை அடைந்துள்ளோம். இந்தியாவிற்கும் ஈரானுக்கும் ஒரு உறவு உள்ளதுபிராந்திய மோதலின் போது இந்தியா பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண்பதையும், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பராமரிப்பதில் கவனம் செலுத்துகிறது. இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan