Google Chrome-ன் அவசர பாதுகாப்பு புதுப்பிப்பு- 3.5 பில்லியன் பயனர்களுக்கு எச்சரிக்கை
16 பங்குனி 2026 திங்கள் 09:16 | பார்வைகள் : 173
கூகுள் Chrome உலாவியில் இரண்டு புதிய Zero-Day பாதுகாப்பு குறைகள் கண்டறியப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து சுமார் 3.5 பில்லியன் Chrome பயனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த குறைகளை ஹேக்கர்கள் ஏற்கனவே பயன்படுத்தத் தொடங்கியதால், கூகுள் அவசர பாதுகாப்பு புதுப்பிப்பை (emergency security update) வெளியிட்டுள்ளது.
CVE-2026-3909 மற்றும் CVE-2026-3910 எனப்படும் இந்த குறைகள் Chrome-இன் முக்கிய தொழில்நுட்ப பகுதிகளை பாதிக்கின்றன.
முதல் குறை Chrome-ன் Skia graphics library பகுதியில் உள்ளது. இது பயனர் ஒரு தீங்கிழைக்கும் இணையதளத்தை பார்வையிடும் போது தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படலாம். இரண்டாவது குறை Chrome-ன் V8 JavaScript engine பகுதியில் உள்ளது. இது ஹேக்கர்களுக்கு தீங்கிழைக்கும் HTML பக்கத்தின் மூலம் code-ஐ இயக்க அனுமதிக்கிறது.
கூகுள், Chrome 153 பதிப்பிலிருந்து பாதுகாப்பு புதுப்பிப்புகளை இரு வாரங்களுக்கு ஒருமுறை வெளியிடும் என அறிவித்துள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள புதுப்பிப்பு (146.0.7680.75/76) Windows, Mac மற்றும் Linux பயனர்களுக்காக உள்ளது.
பயனர்கள் தங்கள் Chrome உலாவியை Help→About Google Chrome பகுதியில் சென்று புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
கூகுள் கடந்த 15 ஆண்டுகளில் பாதுகாப்பு குறைகளை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்களுக்கு 81.6 மில்லியன் டொலர் பரிசுத்தொகை வழங்கியுள்ளது.
Chrome பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan