ஹார்முஸ் நீரிணைக்கு போர்கப்பல்களை அனுப்ப ட்ரம்ப் அழைப்பு
15 பங்குனி 2026 ஞாயிறு 14:37 | பார்வைகள் : 247
ஹார்முஸ் நீரிணையை பாதுகாக்க உலக நாடுகளிடம் தங்கள் போர்கப்பலைகளை அனுப்புமாறு ட்ரம்ப் அழைப்பு விடுத்த நிலையில், அதற்கு சீனா மற்றும் பிரித்தானியா பதிலளித்துள்ளது.
அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலுக்குப் பிறகு ஈரான் ஹொர்முஸ் நீரிணையை மூடியதால் உலகளவில் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஹார்முஸ் நீரிணை உலகின் முக்கியமான எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து வழியாகும். இதனால், பல நாடுகள் எரிசக்தி பாதுகாப்பு குறித்த கவலைகளை வெளிப்படுத்துகின்றன.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் போர் கப்பல்களை அனுப்பி ஹார்முஸ் நீரிணையை பாதுகாக்கவேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார்.
"இந்த கடல்பாதை வழியாக எண்ணெய் பெறும் நாடுகள் தாங்களே பாதுகாப்பை தாங்களே உறுதிசெய்ய வேண்டும். அமெரிக்கா உதவ தயாராக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு உடனடியாக பதிலளித்துள்ள சீனா, "எல்லா தாரப்பினரும் அமைதியை பேண வேண்டும். எரிசக்தி விநியோகம் தடையின்றி நடைபெறுவது அனைவரின் பொறுப்பு. மத்திய கிழக்கு நாடுகளின் உண்மையான நண்பனாக சீனா அமைதியை மீட்டெடுக்க முயற்சிக்கும்" என்று அறிவித்துள்ளது.
பிரித்தானிய பாதுகாப்பு துறை, "எங்கள் கூட்டாளிகளுடன் ஆலோசித்து பல்வேறு விருப்பங்களை பரிசீலித்து வருகிறோம்" என்று தெரிவித்துள்ளது.
இதுவரை பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் பதிலளிக்கவில்லை.
முன்னதாக, ஹார்முஸ் நீரிணை வழியாக ஒரு லிட்டர் எண்ணெய் கூட வெளியேற அனுமதிக்க மாட்டோம் என இரான் எச்சரித்துள்ளது. அனால், சீன கப்பல்களுக்கு அனுமதி வழங்கப்படும் என ஈரான் தெரிவித்தது.
இந்த பதற்றமான சூழலில் இந்திய கடற்படை கப்பல்களும் பாரசீக வளைகுடா அருகே வணிக கப்பல்களுக்கு உதவ தயாராக நிறுத்தப்பட்டுள்ளன.
ஹார்முஸ் நீரிணையில் இதுவரை 29-க்கும் மேற்பட்ட கப்பல்கள் மீதான தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan