நடிகை அனுஷ்காவுக்கு திருமணம்..?
15 பங்குனி 2026 ஞாயிறு 11:26 | பார்வைகள் : 1320
நடிகை அனுஷ்காவின் திருமணம் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இஞ்சி இடுப்பழகி படத்திற்கு பிறகு நடிகை அனுஷ்கா தனது உடல் எடையை குறைக்க பல வருடங்களாக சிகிச்சையில் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.
அதனாலேயே அவர் படங்களில் நடிப்பதையும் பல வருடங்களாக தவிர்த்து வருவதாகவும் கூறப்பட்டது. தற்போது மீண்டும் படங்களில் அவர் பிஸியாக நடிக்க தொடங்கி இருக்கிறார்.
அனுஷ்கா மற்றும் பிரபாஸ் இருவரை பற்றியும் காதல் கிசுகிசுக்கள் இதற்கு முன் வந்திருக்கின்றன. ஆனால் அவர்கள் நட்பாக இருப்பதாக மட்டுமே விளக்கம் கொடுத்தனர். 44 வயதாகும் அனுஷ்காவுக்கு எப்போது திருமணம் என்று தான் ரசிகர்கள் நீண்ட காலமாக கேட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் அனுஷ்காவுக்கு இந்த வருடம் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வந்திருக்கிறது. தொழிலதிபர் ஒருவர் உடன் தான் திருமணம் நடக்க போகிறதாம்.
மேலும் அவரது குடும்பத்திற்கு தூரத்து சொந்தம் என்றும், திருமணத்திற்கு இரண்டு குடும்பத்தினரும் தயாராகி வருகிறார்கள் எனவும் தெலுங்கு மீடியாக்களில் செய்தி வெளியாகி இருக்கிறது. இருப்பினும் அனுஷ்கா திருமணம் பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டால் தான் அது உறுதியாகும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan