ஏழைகளுக்கு நீதி கிடைக்கும்போது தான் நாட்டின் மீது நம்பிக்கை பிறக்கும்: கவர்னர் அர்லேகர்
15 பங்குனி 2026 ஞாயிறு 12:57 | பார்வைகள் : 941
கடைக்கோடி கிராமத் தில் இருக்கும் நபர், உயர் நீதிமன்றம் தனக்காக என்ன செய்கிறது என்பதை, தனது சொந்த மொழியில் புரிந்து கொள்ள வேண்டும், என, தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பேசினார்.
மத்திய நீதித் துறை சார்பில், 'டெலி - லா' எனும் மின்னணு முறையிலான சட்ட சேவைகள் குறித்த கருத்தரங்கு, சென்னையில் நேற்று நடந்தது.
இதில், 'வடகிழக்கு மாநிலங்களுக்கான வழக்காற்று சட்டங்கள் என்ற மின்னணு புத்தகம் வெளியிடப்பட்டது.
விழிப்புணர்வு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பேசிய தாவது:
டெலி - லா திட்டம், சட்ட சேவைகளை சமூகத்தின் விளிம்பு நிலை மக்களிடம் எப்படி கொண்டு செல்வது என்ப தற்கான ஒரு விழிப்புணர்வு முயற்சி.
சட்டம் என்பது சாமானியர்களுக்கும் எட்டக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும் என்பதில், மத்திய சட்டத் துறை அமைச்சகம் மிகச்சிறந்த பணிகளைச் செய்து வருகிறது.
தமிழகத்தில் இத்திட்டம், அனைத்து மாவட்டங்களையும் சென்றடைந்து உள்ளதுடன், 375க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், இதில் பதிவு செய்துள்ளனர். அனைவருக்கும் நீதி என்பதே, இதன் அடிப்படைத் தத்துவம்.
நீதி வழங்கப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல, அது தங்களுக்கு வழங்கப் படுகிறது என்பதை, மக்கள் உணர வேண்டும்.
சொந்த மொழி மறுக்கப்பட்ட ஏழை, எளிய மனிதர்களுக்கு நீதி கிடைக்கும்போது, இந்த நாடு எனக்காகவும் இயங்குகிறது என்ற நம்பிக்கை, அவர்களுக்குப் பிறக்கும். அந்த திருப்தியே, நமது அமைப்பின் மிகப் பெரிய வெற்றியாகும்.
சட்ட வழிமுறைகள், சாமானிய மக்களுக்கும் புரியும் வகையில் எளிமைப்படுத்தப்பட வேண்டும். கடைக்கோடி கிராமத்தில் இருக்கும் நபர், உயர் நீதிமன்றம் தனக்காக என்ன செய்கிறது என்பதைத் தனது சொந்த மொழியில் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மத்திய சட்டத் துறை இணை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி ஆகியோர் பங்கேற்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan