Paristamil Navigation Paristamil advert login

பாக்தாத்தில் அமெரிக்க தூதரகத்தை தாக்கிய ஈரான் - வெடிப்புகள், கரும்புகை பரவல்

பாக்தாத்தில் அமெரிக்க தூதரகத்தை தாக்கிய  ஈரான் - வெடிப்புகள், கரும்புகை பரவல்

14 பங்குனி 2026 சனி 14:33 | பார்வைகள் : 210


ஈராக் தலைநகரான பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் நடத்திய தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூதரக வளாகத்தின் ஹெலிக்கொப்டர் இறங்குதளம் (Helipad) மீது ஏவுகணை விழுந்து வெடித்து, கட்டிடத்திலிருந்து கரும்புகை எழுந்து பரபரப்பை உருவாக்கியுள்ளது. 

இதன் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகின்றன.

சில பாதுகாப்பு அதிகாரிகள் இந்த தாக்குதலை ட்ரோன் மூலமாக நடத்தப்பட்டதாகவும் சிலர் ஏவுகணை மூலம் நடந்திருக்கலாம் என்றும் கூறியுள்ளனர். 

இதுவரை அமெரிக்கத் தூதரகம் அதிகாரபூர்வமாக இதுகுறித்து எந்தக் கருத்தும் வெளியிடவில்லை.

இதற்கும் முன்னர், சவூதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படைத்தளத்தில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அங்கு இருந்த 5 அமெரிக்க இராணுவ விமானங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

இச்சம்பவம் காரணமாக பாக்தாத்தில் அமெரிக்கத் தூதரக வளாகத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஈராக் மற்றும் ஈரான் இடையேயான நிலைமைகள், நடுநிலைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியவையாக உள்ளன. 

இந்நிலையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான உறவுகள் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தும் அபாயத்தில் உள்ளன.