அமீரகத்தை நோக்கி தொடர்ந்தும் ஏவப்படும் ஈரானின் ஏவுகணைகள்
13 பங்குனி 2026 வெள்ளி 06:27 | பார்வைகள் : 1424
ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் எல்லைக்குள் ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா வானூர்திகளை அந்த நாட்டின் பாதுகாப்புப் படைகள் வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளன.
கடந்த 24 மணிநேரத்தில் ஈரானிலிருந்து ஏவப்பட்ட 10 பெலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 26 ஆளில்லா வானூர்திகளை ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்துள்ளதாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஈரான் தனது தாக்குதல்களைத் தொடங்கியதிலிருந்து இதுவரை 278 பெலிஸ்டிக் ஏவுகணைகள், 15 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 1,540 ட்ரோன்களை அமீரக பாதுகாப்புப் படைகள் எதிர்கொண்டுள்ளன.
இந்தத் தொடர்ச்சியான தாக்குதல்களின் விளைவாக இதுவரை அமீரகம், பாகிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.
சுமார் 131 பேர் இந்தத் தாக்குதல்களின் போது சிதறிய சிதறல்களால் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan