Paristamil Navigation Paristamil advert login

இது போன்ற புரட்சியை நான் கண்டதில்லை: சொல்கிறார் செங்கோட்டையன்

இது போன்ற புரட்சியை நான் கண்டதில்லை: சொல்கிறார்  செங்கோட்டையன்

13 பங்குனி 2026 வெள்ளி 13:30 | பார்வைகள் : 190


யாரையோ முதல்வராக்க நாங்கள் இளிச்சவாயர்களா? என முன்னாள் அமைச்சரும், தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது: தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., என இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சியில் அமரலாம்; த.வெ.க.,வை மட்டும் விட்டுவிடக்கூடாது என நினைக்கின்றனர். தி.மு.க.,வின், 'பி' டீம்தான் என்.டி.ஏ., அதனால் தான், தி.மு.க.,வினர் மீது எந்த வழக்கும் பதியப்படுவதில்லை. த.வெ.க.,வுக்கு விசில் சின்னம் கிடைத்தவுடன், போலீஸ் மற்றும் குப்பை வண்டிகாரரர்கள், பஸ் கண்டக்டர், தீயணைப்பு துறையினர் என அனைவரும் விசில் அடிப்பதில்லை.

தேர்தல் கணிப்பில் என்.டி.ஏ., கூட்டணிக்கு, 21 சதவீதம், த.வெ.க.,வுக்கு, 34 சதவீதம் என கூறியுள்ளார்கள். விஜய் ஊர்வலம் வந்து சென்றால், இது 50 சதவீதமாக உயரும். நான் இதுவரை பத்து தேர்தலை சந்தித்துள்ளேன். இதுபோன்ற புரட்சியை கண்டதில்லை. த.வெ.க., 234 தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெறும் நாங்கள் என்ன இளிச்சவாயனா? யாரோ ஒருவரை முதல்வராக்குவதற்கு? இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

13 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026