கப்பல்கள் மீதான தாக்குதலில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு: உறுதி செய்தது மத்திய அரசு
13 பங்குனி 2026 வெள்ளி 12:38 | பார்வைகள் : 1024
மேற்காசியாவில் நடக்கும் போருக்கு மத்தியில், கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 4 பேர் காயமடைந்துள்ள நிலையில் ஒருவரை காணவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேற்காசியாவில், ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் வெளிநாட்டு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், மத்திய துறைமுகம், கப்பல்கள் துறை சிறப்பு செயலர் ராஜேஷ்குமார் சின்ஹா நிருபர்களிடம் கூறியதாவது:
பாரசீக வளைகுடா பகுதியில் நேற்று 28 இந்திய கப்பல்கள் பயணித்தன. இன்றும் 28 கப்பல்கள் சென்றன.
அதில் 24 கப்பல்கள் ஹாஸ்முஸ் ஜலசந்தியின் மேற்கு பகுதி அருகே சென்றன. அவற்றில் 677 இந்திய மாலுமிகள் இருந்தனர். 4 கப்பல்கள் அந்த ஜலசந்தியின் கிழக்கு பகுதியில் சென்றன. அதில் 101 இந்திய மாலுமிகள் இருந்தனர்.
வெளிநாட்டு கப்பல்களில் பணியாற்றிய இந்திய மாலுமிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்த கப்பலில் 78 இந்திய பணியாளர்கள் இருந்தனர். அவர்களில் 70 பேர் பாதுகாப்பாக தப்பினர். 4 பேர் காயம் அடைந்துள்ளனர். அதேநேரத்தில் அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை. 3 பேர் இறந்த நிலையில், ஒருவரை காணவில்லை. இவ்வாறு அவர் கூறினார்
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan