Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேல் தாக்குதலில் கோமாவுக்கு சென்ற ஈரானின் புதிய உச்ச தலைவர்

இஸ்ரேல் தாக்குதலில்  கோமாவுக்கு சென்ற ஈரானின் புதிய உச்ச தலைவர்

12 பங்குனி 2026 வியாழன் 15:59 | பார்வைகள் : 311


அமெரிக்கா மற்றம் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீத கடந்த மாதம் 28 ஆம் திகதி போர் தாக்குதலை தொடங்கியது.

போர் தொடங்கிய நிலையில் உச்ச தலைவரான அலி ஒசெய்னி காமெனி தாக்குதலின் போது உயிரிழந்துள்ளார்.

அதன் பின்  ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி பதியேற்றார்.

மொஜ்தபா கமேனி 'கோமா' நிலையில் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் (mirror.co.uk/) பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் தனது உள்ளுறுப்புகள் சிதைந்து, ஒரு காலை இழந்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.

அத்துடன் மொஜ்தபா, முகமது ரெஸா ஜஃபர்கஜானியின் கண்காணிப்பின் கீழ் "மிகவும் கவலைக்கிடமான" நிலையில் இருப்பதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை ஈரான் டிவி சேனல் வெளியிட்ட செய்தியில் மொஜ்தபாவை ‘எதிரிகளால் காயமடைந்தவர்’ என குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலின் தாக்குதலில் மொஜ்தபா காயமடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

மொஜ்தபாவின் தந்தையும் முன்னாள் உச்ச தலைவருமான அயதுல்லா அலி கமேனி கடந்த 28 ஆம் திகதி போரின் முதல் நாளில் கொல்லப்பட்ட பிறகு இதுவரையிலும் மொஜ்தபா கமேனி தொடர்ந்து ரகசிய இடத்திலேயே இருந்து வருகிறார்.

இதுவரை அவர் பொது வெளியில் தோன்றவில்லை. இந்த நிலையிலேயே ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி 'கோமா' நிலையில் உள்ளதுடன் , காலை இழந்துள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

அயதுல்லாவுக்குப் பிறகு ஈரானின் உச்ச தலைவராக யார் வந்தாலும் அவரையும் கொல்வோம் என இஸ்ரேல் ஏற்கனவே சூளுரைத்துள்ளது.

இந்நிலையில், விரைவில் இஸ்ரேல் ஈரான் போர் முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

12 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026