ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்கள் ஏலம் - தமிழக அரசு
13 பங்குனி 2026 வெள்ளி 07:48 | பார்வைகள் : 179
ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்கள் ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-.கரூர் மாவட்ட பாமக தலைவர் மகன் வெட்டிக்கொலை:
குற்றவாளிகளை கைது செய்யவேண்டும் - ராமதாஸ்.தமிழ்நாடு அரசு மொத்தம் ரூபாய் 8,000 கோடி மதிப்பில், 5 ஆண்டு 6 மாதக்கால பிணையப் பத்திரங்கள் ரூபாய் 2,000 கோடி, தமிழ்நாடு அரசின் 7 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ரூபாய் 1,000 கோடி, தமிழ்நாடு அரசின் 9 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ரூபாய் 2,000 கோடி, தமிழ்நாடு அரசின் 7.41 சதவீத பிணையப் பத்திரங்கள் 2036 மறுவெளியீடு ரூபாய் 1,000 கோடி, தமிழ்நாடு அரசின் 12 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ரூபாய் 2,000 கோடி ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது.
ஓபிசி கிரீமிலேயர் பிரிவினர் நிர்ணயம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு.இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் மார்ச் 17, 2026 அன்று நடத்தப்படும். போட்டி ஏலக்கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் [Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System] மின்னணு படிவத்தில் (Electronic format) மார்ச் 17, 2026 அன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan