தமிழக மக்கள் உதயநிதியை முதல்வராக ஏற்க மாட்டார்கள்: பியூஷ் கோயல் கணிப்பு
12 பங்குனி 2026 வியாழன் 14:38 | பார்வைகள் : 1017
திருச்சியில் தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி: தமிழக சட்டசபை தேர்தல், தமிழர்களின் பெருமையை, தமிழ் கலாச்சாரத்தை பாதுகாப்பதற்கானது; ஸ்டாலினின் ஊழல் நடைமுறைகளில் இருந்து மக்களைக் காப்பதற்கானது. இந்தத் தேர்தலில், ஊழல் நிறைந்த மக்கள் விரோத ஸ்டாலின் அரசு அகற்றப்படுவது உறுதி. தமிழக மக்கள் உதயநிதியை ஒருபோதும் முதல்வராக ஏற்க மாட்டார்கள்.
டாஸ்மாக் ஊழல் மூலம் அரசு கருவூலத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துக்கும் தி.மு.க.,வினருக்கும் 50 ஆயிரம் கோடி ரூபாய் சென்றுள்ளது.அரசின் பல்வேறு ஒப்பந்தங்களில் ஊழல் மலிந்து கிடக்கிறது. சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளதால், தி.மு.க., அரசின் மீது மக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர்.
ஸ்டாலின் குடும்ப ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, அடுத்த முதல்வராக பழனிசாமி பதவியேற்பார். தமிழகத்தில் தே.ஜ., கூட்டணி தலைமையில் சிறந்த ஆட்சி அமையும். எங்கள் கூட்டணிக் கட்சிகள் ஒரு குடும்பத்தைப் போன்றவை. ஒரு அறைக்குள் கலந்து ஆலோசிக்கப்பட்டு, அனைத்து முடிவுகளும் சுமுகமாக எடுக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan