Paristamil Navigation Paristamil advert login

ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் ஈரானின் 16 கப்பல்களை அழித்த அமெரிக்கா

ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் ஈரானின் 16 கப்பல்களை அழித்த அமெரிக்கா

11 பங்குனி 2026 புதன் 08:25 | பார்வைகள் : 257


ஹோர்முஸ் நீரிணை வழியில் கண்ணிவெடிகளை வைக்கும் ஈரானின் 16 கடற்படை கப்பல்களை அழித்ததாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் போரைத் தொடர்ந்து, பாரசீக வளைகுடாவை அரபிக் கடலுடன் இணைக்கும் ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாகவும், தடையை மீறிச் செல்லும் எண்ணெய்க் கப்பல்கள் தாக்கி அழிக்கப்படும் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் பயணிகள் மற்றும் சரக்கு கப்பல்களுக்கு அமெரிக்க கடற்படை பாதுகாப்பு அளிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

ஹோர்முஸ் நீரிணை வழியில் கண்ணிவெடிகளை வைக்கும் 16 கப்பல்கள் உள்பட ஈரானின் பல கடற்படை கப்பல்களை தாக்கி அழித்ததாக அமெரிக்காவின் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணை வழித்தடத்தில் ஏதேனும் கண்ணிவெடிகள் வைத்திருந்தால் உடனடியாக அதனை ஈரான் அகற்ற வேண்டும்.

கண்ணிவெடி வைக்கப்பட்டு, அவற்றை அகற்றாமல் இருந்தால், இதுவரை இல்லாத வகையிலான ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

மேலும், ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி வைக்கும் படகு அல்லது கப்பல்களை அழிக்க போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் அதே தொழில்நுட்பம் மற்றும் ஏவுகணையை பயன்படுத்துகிறோம். கண்ணிவெடி பதிக்கும் கப்பல்களை தாக்கி முற்றிலும் அழித்துள்ளோம்  எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

11 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026