CAF உதவித்தொகைகளில் சிறிய அதிகரிப்பு!!
11 பங்குனி 2026 புதன் 06:34 | பார்வைகள் : 4621
ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், RSA மற்றும் குடும்ப கொடுப்பனவுகள் போன்ற பல CAF சலுகைகள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கப்படும். 2026 ஆம் ஆண்டில், அவை கடந்த ஆண்டு 1.7% ஆக இருந்த நிலையில், தற்போது 0.9% அதிகரிக்கும்.
இந்த மாற்றம் பணவீக்கத்தை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.ஏப்ரல் 1 முதல் மார்ச் 31, 2027 வரை, ஒரு தனி நபருக்கு அமுலில் இருக்கும் புதிய RSA தொகைகள் இங்கே:
- குழந்தைகள் இல்லாத தனி நபருக்கு : 652.43 யூரோக்கள் (646.52 யூரோக்களுடன் ஒப்பிடும்போது)
- 1 குழந்தையுள்ள சார்ந்திருக்கும் தனி நபருக்கு : 978.51 யூரோக்கள் (969.78 யூரோக்களுடன் ஒப்பிடும்போது)
- 2 சார்ந்திருக்கும் குழந்தைகள் உள்ள தனி நபருக்கு: 1,174.21 யூரோக்கள் (1,163.74 யூரோக்களுடன் ஒப்பிடும்போது)
- கூடுதலாக சார்ந்திருக்கும் குழந்தைக்கு: 260.94 யூரோக்கள் (258.61 யூரோக்களுடன் ஒப்பிடும்போது)
ஒரு தம்பதியினருக்கான RSA தொகைகள்:
- குழந்தைகள் இல்லாத தம்பதியினருக்கு : 978.51 யூரோக்கள் (969.78 யூரோக்களுடன் ஒப்பிடும்போது)
- 1 சார்ந்திருக்கும் குழந்தையுள்ள தம்பதியினருக்கு: 1,174.21 யூரோக்கள் (1,163.74 யூரோக்களுடன் ஒப்பிடும்போது)
- 2 சார்ந்திருக்கும் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு : 1,369.92 யூரோக்கள் (1,357.70 யூரோக்கள்)
- கூடுதலாக சார்ந்திருக்கும் குழந்தைக்கள் உள்ள குடும்பத்திற்கு: 260.94 யூரோக்கள் (258.61 யூரோக்களுடன் ஒப்பிடும்போது)
சார்ந்திருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை, அவர்களின் வயது மற்றும் குடும்ப வருமான அளவைப் பொறுத்து உதவித்தொகையின் அளவு மாறுபடும்.
AAH இன் தொகை மாதத்திற்கு 1,042.62 யூரோக்களாக உயரும், இது 9.30 யூரோக்கள் அதிகரிக்கும்.
2026 கல்வியாண்டின் தொடக்கத்திற்கான புதிய தொகைகளின் ARS விவரங்கள் இங்கே:
- 6 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளுக்கு 427.29 யூரோக்கள் (2025 இல் 423.48 யூரோக்களுடன் ஒப்பிடும்போது)
- 11 முதல் 14 வயதுடைய இளைஞர்களுக்கு 450.87 யூரோக்கள் (2025 இல் 446.85 யூரோக்களுடன் ஒப்பிடும்போது)
- 15 முதல் 18 வயதுடைய இளைஞர்களுக்கு 466.49 யூரோக்கள் (2025 இல் 462.33 யூரோக்களுடன் ஒப்பிடும்போது) வழங்கப்படும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan