Paristamil Navigation Paristamil advert login

எரிபொருள் விலை அதிகரிப்பு - பிரெஞ்சு மக்கள் என்ன முட்டாள்களா?

எரிபொருள் விலை அதிகரிப்பு - பிரெஞ்சு மக்கள் என்ன முட்டாள்களா?

10 பங்குனி 2026 செவ்வாய் 19:14 | பார்வைகள் : 631


எரிபொருள் விலைகளை உடனடியாக உயர்த்திய சில விநியோகஸ்தர்கள் 'பிரெஞ்சு மக்களை முட்டாள்களாக எடுத்துக்கொள்கிறார்கள்' என்று, உள்ளூர் வணிக ஒன்றியத்தின் U2P - Union des entreprises de proximité) தலைவர் மிசேல் பிகோன் (Michel Picon) இன்று செவ்வாய்க்கிழமை ஒரு வானொலி செவ்வியில் தெரிவிததுள்ளார்.

«அவர்களை ஒழுங்கு முறைக்கு அழைக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் கேட்டிருக்கிறோம். இதனைச் 
சரிபார்க்க, கட்டுப்படுத்த அரசாங்கத்துக்கு அதிகாரம் இருக்கிறது. பிரெஞ்சு மக்களை முட்டாள்களாக நினைப்பவர்களை, மன்னிக்கவும் நான் இவ்வாறு சொல்ல வேண்டி வருகிறது!» என்று வானொலியில் கேட்கப்பட்டபோது திரு. பிகோன் விளக்கியுள்ளார்.

கைவினைஞர்கள் மற்றும் சிறு தொழில் முனைவோர்களை பிரதானமாக பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த தொழில் அமைப்புத் தலைவர், கடந்த வியாழக்கிழமை பொருளாதார அமைச்சகத்துடன் நடைபெற்ற நிறுவனங்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

«பயப்பட வேண்டாம், மூன்று மாத கையிருப்பு இருக்கிறது, நமக்கு சேமிப்புகள் இருக்கின்றன...' என்று சொல்லிக்கொண்டே, அதே நேரத்தில் இவ்வளவு வேகமான விலை உயர்வை எப்படி நியாயப்படுத்த முடியும்?»

«கடந்த வாரம் மூன்று நாட்களுக்குள் இது நடந்தது இது முற்றிலும் சாத்தியமற்றது. விலையை உயர்த்த யாருக்கும் கட்டாயம் இல்லை», என்று பிகோன் மேலும் கோபத்துடன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

10 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026