பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும்: சுப்ரீம் கோர்ட்
11 பங்குனி 2026 புதன் 09:53 | பார்வைகள் : 272
இந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
1937ம் ஆண்டு இயற்றப்பட்ட முஸ்லிம் தனி நபர் சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்ஷி, மகாதேவன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது பக்ஷி கூறியதாவது:
தனி நபர் சட்டங்களை செல்லாது என அறிவிக்க, சட்டம் இயற்றும் மன்றங்களில் பொது சிவில் சட்டம் இயற்றுவது சிறந்தது. இந்த நீதிமன்றம் ஏற்கனவே பொது சிவில் சட்டத்திற்கு பரிந்துரை வழங்கி இருந்தது.
முஸ்லிம் நபர் ஒருவர் தன்னிச்சையாக, அவர் பின்பற்றும் நடைமுறையின்படி தன்னிச்சையாக விவாக ரத்து செய்யலாம். தனி நபர் சட்டப்படி இரு தார உறவுகளை செல்லாது என அறிவிக்க முடியுமா? முடியாது. எனவே அடிப்படை உரிமைகளை கொண்டு வருவதற்கு சட்டம் இயற்றும் அதிகாரத்திற்கு கீழ்பணிய வேண்டும் என்றார்.
தலைமை நீதிபதி சூர்யகாந்த் :
சரியாக சொன்னால், இதற்கு பதில் பொது சிவில் சட்டம். இவ்வாறு அவர் கூறினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan