மத்திய கிழக்கில் போர் - வியட்நாமிலும் எரிபொருள் நெருக்கடி
10 பங்குனி 2026 செவ்வாய் 13:50 | பார்வைகள் : 223
மத்திய கிழக்கு போர் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வியட்நாமில் ஏற்பட்டுள்ள கடும் எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்க ஊழியர்களை 'வீட்டிலிருந்தே பணிபுரிய' ஊக்குவிக்குமாறு அந்நாட்டு வர்த்தக அமைச்சு நிறுவனங்களை பரிந்துரைத்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளின் எரிசக்தி இறக்குமதியில் அதிகளவில் தங்கியுள்ள வியட்நாம், இந்தப் போரினால் ஆசிய பிராந்தியத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது.
கடந்த மாத இறுதியில் இருந்து வியட்நாமில் எரிபொருள் விலைகள் அதிரடியாக உயர்ந்துள்ளன.
பெற்றோல் 32 சதவீதத்தாலும், டீசல் 56 சதவீதத்தாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மண்ணெண்ணெய் 80 சதவீதத்தாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் ஹனோய் உள்ளிட்ட பிரதான நகரங்களில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளில் வாகனங்கள் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
எரிபொருள் விலையைக் குறைக்கும் நோக்கில், எரிபொருளுக்கான இறக்குமதி வரிகளை ஏப்ரல் இறுதி வரை நீக்குவதற்கு வியட்நாம் அரசாங்கம் திங்கட்கிழமை 09.03.2026 தீர்மானித்துள்ளது.
வியட்நாம் பிரதமர் பாம் மின் சின் குவைத், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத் தலைவர்களுடன் தொலைபேசியில் உரையாடி, வியட்நாமிற்குத் தேவையான மசகு எண்ணெய் மற்றும் எரிபொருளைத் தடையின்றி வழங்க ஒத்துழைப்பு கோரியுள்ளார்.
சர்வதேச பங்காளிகளிடமிருந்து சுமார் 04 மில்லியன் பீப்பாய்கள் மசகு எண்ணெயை அவசரகாலத் தேவைகளுக்காகத் திரட்டியுள்ளதாகப் வியட்நாம் பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார்.
தற்போதைய நெருக்கடியைப் பயன்படுத்தி எரிபொருளைப் பதுக்குபவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் வியட்நாமின் விமானத் துறை மற்றும் உற்பத்தித் துறையிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan