அஜித்க்கு சிக்காத தயாரிப்பாளர்கள்?
9 பங்குனி 2026 திங்கள் 15:23 | பார்வைகள் : 1245
அஜித்தின் 'குட் பேட் அக்லி' வெளியாகி ஓராண்டு முடிந்துவிட்டது. அவரின் அடுத்த படத்தை ஆதிக் ரவிசந்திரனே இயக்கப்போகிறார். பிப்ரவரியில் படப்பிடிப்பு என்று கூறப்பட்டது. ஆனால், மார்ச் தொடங்கியும் அஜித் படம் தொடங்கப்படவில்லை. அதற்கு முக்கிய காரணம் இன்னமும் தயாரிப்பாளர் கிடைக்கவில்லையாம். அஜித் 185 கோடி சம்பளம் கேட்பதால், பல தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள். தமிழில் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், தெலுங்கில் சிலர் முயற்சித்தும் அஜித் சம்பளத்தை குறைக்க மறுப்பதால், அந்த சம்பளம் கொடுத்தால் கண்டிப்பாக நஷ்டம் வரும் என்ற நினைத்து அவர்கள் ஒதுங்கி நிற்கிறார்களாம்.
அஜித் சம்பளம், ஹீரோயின், இயக்குனர், தொழில் நுட்ப கலைஞர்கள் சம்பளம், படப்பிடிப்பு செலவு என அனைத்தும் சேர்த்தால் 250 கோடி முதல் 300 கோடி பட்ஜெட் ஆகும். அந்த அளவுக்கு அஜித் மார்க்கெட் இல்லை. சாட்டிலைட், டிஜிட்டல் ரைட்ஸ் வியாபாரம் இல்லை. 185 கோடி சம்பளம் என்றால் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே நஷ்டம் என்ற நிலை ஏற்படும். குட் பேட் அக்லியும் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது. அஜித் மனசு வைத்து இறங்கி வந்தால் மட்டுமே தயாரிப்பாளர்கள் அந்த படத்தை தயாரிக்க முன் வருவார்கள் என்றும் கோலிவுட்டில் பேசப்படுகிறது. நீங்களே சொந்தமாக படம் தயாரிங்க என்றால், அந்த பழக்கம் என்னிடம் இல்லை என அஜித் நழுவுகிறாராம்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan