Paristamil Navigation Paristamil advert login

மேற்காசியாவில் நிலவும் போர் பெரிய நிதி இழப்புக்கு வழிவகுக்கும்; ராகுல்

மேற்காசியாவில் நிலவும் போர் பெரிய நிதி இழப்புக்கு வழிவகுக்கும்; ராகுல்

10 பங்குனி 2026 செவ்வாய் 08:52 | பார்வைகள் : 179


மேற்கு ஆசியாவில் நிலவும் போர் மிகப்பெரிய நிதி இழப்புக்கு வழிவகுக்கும் என காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் தெரிவித்து உள்ளார்.

பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்றபின் நிருபர்களிடம் ராகுல் கூறியதாவது: உலக அளவில் மாற்றத்தை கொண்டுவர ஒரு போர் நடந்து வருகிறது.மேற்கு ஆசியாவில் நிலவும் போர் மிகப்பெரிய நிதி இழப்புக்கு வழிவகுக்கும். நீங்கள் பங்குச் சந்தை வீழ்ச்சியை  பார்த்திருப்பீர்கள், எனவே நாடு ஒரு பெரிய அடியைச் சந்திக்கும். எனவே, அதைப் பற்றி பார்லிமென்டில் விவாதிப்பதில் என்ன பிரச்னை?

நமது பொருளாதாரம் குறிப்பிடத்தக்க சேதத்தை சந்திக்கப் போகிறது. மேற்காசிய நெருக்கடி குறித்து பார்லிமென்டில் விவாதிக்கவில்லை. இது குறித்து விவாதிக்க அரசு விரும்பவில்லை. பிரதமரின் நிலைப்பாட்டையும் அவர் எவ்வாறு நாட்டை சமரசம் செய்தார் என்பதையும் அது அம்பலப்படுத்தும் என்று அஞ்சுகிறது. மேற்கு ஆசிய நெருக்கடி இந்தியாவில் எரிபொருள் விலைகளையும் கடுமையாக பாதிக்கக்கூடும்.

மேற்கு ஆசிய விஷயம் முக்கியமில்லையா? எரிபொருள் விலை மற்றும் பொருளாதார சீரழிவு ஆகியவை விவாதத்திற்குரிய முக்கியமான விஷயங்கள் அல்லவா? இவை பொதுப் பிரச்னைகள். இவற்றை நாங்கள் முக்கியமானதாகக் கருதுகிறோம், விவாதம் செய்ய விரும்புகிறோம்.ஆனால் அவர்கள் விவாதத்தை விரும்பவில்லை. பார்லிமென்டில் இருந்து பிரதமர் மோடி சென்றதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பிரதமர் மோடியால் விவாதத்திற்கு வர முடியாது என்று நான் உங்களுக்கு சொல்கிறேன். இவ்வாறு ராகுல் கூறினார்.

10 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026