உலகின் முடிவு தொடர்பில் ரஷ்யா எச்சரிக்கை
9 பங்குனி 2026 திங்கள் 14:15 | பார்வைகள் : 336
ஈரான் மீதான தாக்குதலை குறிப்பிட்டு உலகத்தின் முடிவு நம் மீது வந்துவிட்டது என ரஷ்யா எச்சரித்துள்ளது.
ஈரான் மீதான பாரிய அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதலை 'சரியான புயல்' என்று ரஷ்யா முத்திரை குத்தியது.
அமெரிக்க, இஸ்ரேலிய இராணுவ நிலைகளில் ஈரானுக்கு உளவு வேலையில் மட்டுமே ரஷ்யா உதவுகிறது.
மத்திய கிழக்கில் நடந்த போர், எண்ணெய் விலையில் மிகப்பெரிய ஏற்றத்தை ஏற்படுத்தியதால், ஒரு பீப்பாயின் விலை பல ஆண்டுகளில் முதல் முறையாக 100 டொலர்களைத் தாண்டியது.
சர்வதேச சட்டத்தின் முறிவினை, விளாடிமிர் புடினின் (Vladimir Putin) செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தாக்கி பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், "மனித வரலாற்றில் மோசமான விடயங்கள் நடந்துள்ளன. ஆனால் அப்போது நாம் உயிருடன் இருக்கப்போவதில்லை, எனவே உலகின் முடிவு நம் மீது வந்துவிட்டது என்று நமக்கு தோன்றுகிறது. நாம் அனைவரும் சர்வதேச சட்டம் என்று அழைப்பதை இழந்துவிட்டோம் என்று புடின் நம்புகிறார்.
சர்வதேச சட்டத்தின் விதிமுறைகள் மற்றும் கொள்கைகளைப் பின்பற்ற மற்றவர்களை எப்படி அழைக்க முடியும் என்று கூட எனக்குப் புரியவில்லை. அது இனி இல்லை. சர்வதேச சட்டத்தை மாற்றியமைத்த சட்டம் எது என்பதை இப்போது யாராலும் உருவாக்க முடியாது. தெளிவான வரையறையை யாராலும் வழங்க முடியாது" என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "புடின் சொல்வது சரிதான். இப்போது தொடங்கியுள்ள இந்த சரியான புயலின் பின்னணியில், நாம் நம் மீதும், நமது நலன்கள் மீதும், நமது ஆற்றலிலும் கவனம் செலுத்த வேண்டும். அது இல்லாத இடத்தில், நாம் அதை கட்டியெழுப்ப வேண்டும். கவனமாக சிந்திக்க வேண்டும், கவனம் செலுத்த வேண்டும்" என கூறியுள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan