Paristamil Navigation Paristamil advert login

வளைகுடா போர்ச் சூழல் முடிவுக்கு கொண்டு வர ஓமான் முயற்சி

வளைகுடா போர்ச் சூழல் முடிவுக்கு கொண்டு வர ஓமான் முயற்சி

8 பங்குனி 2026 ஞாயிறு 10:13 | பார்வைகள் : 1818


வளைகுடா  போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, ஓமான் வெளிவிவகார அமைச்சர் சையித் பத்ர் பின் ஹமத் அல்புசைதி (Sayyid Badr bin Hamad Al-Fusaidi) பல்வேறு நாடுகளின் தூதுவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் அமெரிக்கா, பிரேசில், துருக்கி ஆகிய நாடுகளின் தூதுவர்களுடன் முதற்கட்டச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

வளைகுடா ஒத்துழைப்பு பேரவை நாடுகள், எகிப்து, ஈராக் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளின் தூதுவர்களுடன் இரண்டாவது சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.

போரை நிறுத்துவதற்கும் அதன் விளைவுகளைக் கட்டுப்படுத்துவதற்கும் அரசியல் மற்றும் இராஜதந்திர அழுத்தங்களைத் தீவிரப்படுத்துவதே தற்போதைய முக்கிய முன்னுரிமையாகும் என ஓமான் வெளிவிவகார அமைச்சுதெரிவித்துள்ளது.

அதோடு போரை முடிவுக்குக் கொண்டு வருவது "அனைத்து நாடுகளுக்குமான மிக உயர்ந்த தேசிய மற்றும் அரபு நலன்" என்று குறிப்பிட்ட அல்புசைதி, தற்போதைய சூழலை மாற்றுவதற்கு, ஒரு விரிவான பிராந்திய மற்றும் சர்வதேச நடவடிக்கையை வலியுறுத்தியுள்ளார்.