இஸ்ரேல் - ஈரான் இடையில் போர் தாக்குதல் தீவிரம்
8 பங்குனி 2026 ஞாயிறு 10:04 | பார்வைகள் : 225
இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே நேரடித் துப்பாக்கிச் சமர் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளமை உலக நாடுகளுக்கு பெரும் அச்சடததை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக வடக்கு இஸ்ரேல், ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் ஆகிய பகுதிகளில் அபாய எச்சரிக்கை ஒலிகள் எழுப்பப்பட்டுள்ளன.
அண்டை நாடுகளின் வான்பரப்பு மற்றும் நிலப்பரப்பு தன் மீது தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப்படாத வரை, பதற்றத்தைக் குறைக்கத் தாம் தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்திருந்தது.
எனினும், வளைகுடா தளங்களிலிருந்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால், அந்த வாய்ப்பைத் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பாழாக்கிவிட்டதாக ஈரான் பின்னர் அறிவித்துள்ளது.
இந்தநிலையில், ஈரானின் இராணுவத் திறனை அமெரிக்கத் தாக்குதல்கள் கணிசமாகச் சேதப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்களுக்கு பிரித்தானியாவின் வான் படைத் தளங்களைப் பயன்படுத்தப் பிரதமர் சேர் கீர் ஸ்டார்மர் அனுமதி வழங்கியதை தொடர்ந்து, 24 ஏவுகணைகளைச் சுமந்து செல்லக்கூடிய அமெரிக்காவின் பிரம்மாண்டமான டீ-1 Lancer போர் வானூர்தி பிரித்தானியாவின் RAF Fairford தளத்தில் தரையிறங்கியுள்ளது.
ஈரானிலிருந்து ஏவப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் குரூஸ் ஏவுகணைகள் தமது நிலப்பரப்பை ,லக்கு வைத்ததாக கட்டார் உறுதிப்படுத்தியுள்ளது.
லெபனானின் பெக்கா பள்ளத்தாக்கில் உள்ள நபி சித் நகரில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 41 பேர் கொல்லப்பட்டதை பிரதமர் நெதன்யாகு உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்துடன் பெய்ரூட்டின் ஹாரெட் ஹ்ரிக் பகுதியில் ,ஸ்ரேல் மிகக் கொடூரமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில், வடக்கு இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லைக்கு அருகில் உள்ள இஸ்ரேலியப் படைகளைக் குறிவைத்து இன்று தாக்குதல்களை நடத்தியதாக ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது.
போர்நிறுத்தம் அமுலில் உள்ள போதிலும், தெற்கு காசாவில் பாலஸ்தீனர்கள் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
டிரம்ப் நிர்வாகம், நாடாளுமன்ற மறுஆய்வைத் தவிர்த்து, சுமார் 650 மில்லியன் டொலர் மதிப்பிலான 20,000க்கும் அதிகமான குண்டுகளை இஸ்ரேலுக்கு விற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்கள் ஈரானியப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அமெரிக்கா மறுத்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, ஓமான் வெளிவிவகார அமைச்சர் சையித் பத்ர் பின் ஹமத் அல்புசைதி பல்வேறு நாடுகளின் தூதுவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள போர் மோதல்கள், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் சுகாதாரச் சேவைகளைப் பாரியளவில் பாதித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் தெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ் எச்சரித்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan