Paristamil Navigation Paristamil advert login

துபாய் விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்

 துபாய் விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்

7 பங்குனி 2026 சனி 19:27 | பார்வைகள் : 242


துபாய் விமான நிலையத்தில் சனிக்கிழமை ஈரான் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாகவும் இதனால் விமான சேவை பாதிக்கப்பட்டதகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதலில் கடந்த பெப்ரவரி 28 அன்று ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், குவைத் ஆகிய வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்து ஈரானின் படைகள் தாக்கி வருவதால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில்,  துபாய் விமான நிலையத்தின் மிக அருகே ஈரான்  7.3.2026 வான் வழி தக்குதல்களை நடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

சனிக்கிழமை காலையில் துபை சர்வதேச விமான நிலைய ஓடுதளம் ஒன்றில் ஈரானிலிருந்து ஏவப்பட்ட ட்ரோன் விழுந்து சேதம் விளைவித்ததால் கரும்புகை எழுந்ததாக கூறப்பட்டது.

துபாய்யில் நடைபெற்ற இந்தத் தாக்குதலின் எதிரொலியால்,  துபாய் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது

இதனிடையே, ஐக்கிய அரபு அமீரக வான்வெளி பாதுகாப்பு அமைப்பு மூலம் ஈரானிலிருந்து வரும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு தக்க பதிலடி அளிக்கப்பட்டு வருவதாகவும் அமீரக பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து, பகுதியளவில் விமான நிலைய செயல்பாடு இயங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், பயணிகள் விமான நிலையத்துக்கு வருகை தர வேண்டாமெனவும், அவர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவதைக் கருத்திற்கொண்டு அவற்றின் அடிப்படையில் வருகை தரவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

7 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026