அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய ஈரானிய ஜனாதிபதி!
7 பங்குனி 2026 சனி 13:25 | பார்வைகள் : 370
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களுக்கு பதிலடியாக பிராந்திய நாடுகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்கள் தொடர்பில், ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் அந்த நாடுகளிடம் உத்தியோகபூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளார்.
ஈரானிய அரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட விசேட வீடியோ செய்தியிலேயே ஜனாதிபதி பெசெஷ்கியான் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கம் ஈரானுக்கு கிடையாது என அவர் இதன்போது திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், அண்டை நாடுகளிலிருந்து ஈரானுக்கு எதிராகத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படாத பட்சத்தில், ஈரான் ஒருபோதும் அந்த நாடுகள் மீது தாக்குதல்களைத் தொடுக்காது எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
"இனிவரும் காலங்களில், முதலில் எமது நாடு தாக்கப்படாத வரை, அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம்" என்ற தீர்மானத்தை ஈரானின் இடைக்கால தலைமைத்துவம் எடுத்துள்ளதாக ஜனாதிபதி பெசெஷ்கியான் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
சமீபகாலமாக வளைகுடா பிராந்தியத்திலுள்ள விமான நிலையங்கள் மற்றும் வர்த்தக மையங்கள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியிருந்த நிலையில், ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கும் ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan