Paristamil Navigation Paristamil advert login

நேபாளத்தில் இன்று பொதுத் தேர்தல்

நேபாளத்தில் இன்று பொதுத் தேர்தல்

5 பங்குனி 2026 வியாழன் 11:34 | பார்வைகள் : 190


நேபாளத்தில் இன்று 5.3.2026 பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்று வருகின்றன.

கடந்த ஆண்டு நேபாளத்தில் பிரதமராக பதவி வகித்த கே.பி.சர்மா ஒலிக்கு எதிராக இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

அப்போதைய போராட்ட நிலைமை கட்டுப்படுத்தப்படாத நிலையில், அன்றைய பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர், இடைக்கால பிரதமராக சுஷிலா கார்கி நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த பொதுத் தேர்தலில் நேபாள காங்கிரஸ் கட்சி, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி முதலான கட்சிகள் களமிறங்கியுள்ளன.

நேபாள நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் மொத்தம் 275 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 165 பேர் நேரடியாகவும் 110 பேர் விகிதாசார அடிப்படையிலும் தெரிவு செய்யப்படுவர் என தெரிவிக்கப்படுகிறது.

வாக்களிப்பு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை நிறைவடைய சில நாட்கள் ஆகும் என்றும் கூறப்படுகிறது. 

5 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026