Paristamil Navigation Paristamil advert login

மத்திய கிழக்கில் போர் அச்சுறுத்தல் - பிரித்தானியாவில் நிலவும் பெட்ரோல் தட்டுப்பாடு

மத்திய கிழக்கில் போர் அச்சுறுத்தல் - பிரித்தானியாவில் நிலவும் பெட்ரோல் தட்டுப்பாடு

5 பங்குனி 2026 வியாழன் 11:28 | பார்வைகள் : 249


ஈரானை இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்க, பதிலுக்கு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்த ஈரான், ஹோர்மூஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்ததுடன், ஏதாவது கப்பல் ஜலசந்தியில் நுழைந்தால் தீவைத்துக் கொளுத்தப்படும் என்றும் எச்சரித்தது.

அதைத் தொடர்ந்து, கப்பல்களுக்கு பாதுகாப்பு தருவதாக ட்ரம்ப் அறிவித்தார். என்றாலும், சந்தேகம் காரணமாக, எண்ணெய் நிறுவனங்கள் கப்பல்களை இயக்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரித்தானியாவின் பல்வேறு இடங்களில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு தட்டுப்பாடு உருவாகியுள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகிவருகின்றன.

சில எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் நிரப்ப நீண்ட வரிசைகளில் வாகனங்கள் காத்திருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

சில இடங்களில் ஏற்கனவே எரிபொருள் தீர்ந்துவிட்டதாக கூறப்பட்டதால் விரக்தியடைந்துள்ளதாக சாரதிகள் தெரிவித்துள்ளார்கள்.

அது மட்டுமின்றி, பல இடங்களில் பெட்ரோல் விலையும் டீசல் விலையும் அதிகரித்துள்ளது.

ஆக, சற்று விலை குறைவாக எரிபொருள் கிடைப்பதாகக் கூறப்படும் இடங்களில் மேலும் நீண்ட வரிசைகளில் வாகனங்கள் நிற்கின்றன.

ஈரான் போர் துவங்கி ஒருவாரம் கூட ஆகவில்லை. அதற்குள், சில நாடுகளில் எரிபொருள் குறைவாகவே கையிருப்பில் உள்ளதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.

பிரித்தானியாவைப் பொருத்தவரை, 1973ஆம் ஆண்டு அரபு இஸ்ரேல் போரின்போது, எரிபொருள் விலைகள் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகரித்தன.

தற்போது மீண்டும் இஸ்ரேல், அமெரிக்கா, ஈரான் மோதல் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து, பலருக்கும் 1973ஆம் ஆண்டு போர் நினைவுக்கு வந்துள்ளதை மறுப்பதற்கில்லை. 

5 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026