Paristamil Navigation Paristamil advert login

கருமையடைவதை தடுக்கும் பேரிச்சம்பழ பேஸ்பேக்

கருமையடைவதை தடுக்கும் பேரிச்சம்பழ பேஸ்பேக்

6 பங்குனி 2017 திங்கள் 11:34 | பார்வைகள் : 16031


 நம்முடைய சருமத்தின் நிறத்தைத் தீர்மானிப்பது என்னவோ மரபணுக்களாக இருந்தாலும், ஊட்டச்சத்தில்லா உணவுகள், சூரியவெப்பம், சுற்றுச்சூழல், அதிக ரசாயனப் பயன்பாடு, மாசுக்களால் சருமம் பொலிவிழந்து விடுகிறது. அதனால் சராசரி நிறத்திலிருந்து மங்கி, முகம் மற்றும் கை, கால் பகுதி கருமையடைந்துவிடுகிறது.

 
இதற்கு என்னதான் ரசாயனங்கள் கலந்த கிரீம்களைப் பயன்படுத்தினாலும் அவை தாற்காலிகமாக மட்டுமே மாற்றத்தைத் தருகின்றன. ஆனால் இயற்கைப் பொருட்களைக் கொண்டு மேற்கொள்ளும் பராமரிப்பு தான் நிரந்தரத் தீர்வைத் தரும்.
 
பேரிச்சையில் இரும்புச்சத்து நிறைந்திருக்கிறது. இது ரத்தசோகையைப் போக்கும் அற்புத மருந்தாக மட்டும் அல்லாமல் சருமத்தின் கருமையைப் போக்கி, பொலிவாகவும் சிகப்பாகவும் மாற்றும் அற்புதத்தையும் செய்கிறது.
 
தேவையான பொருட்கள்
 
கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம் - 2
உலர்ந்த திராட்சை பழம் - 10
 
இவை இரண்டையும் ஒரு நாள் முழுவதும் வெந்நீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு அதை நன்கு மை போல அரைத்துக் கொள்ளுங்கள். இந்த கலவையுடன் அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளுங்கள்.
 
பின்பு இதை முகத்திற்கு பேஸ்பேக் போல போட்டு, 20 நிமிடங்கள் கழித்து, முகத்தை கழுவி விடுங்கள். வெயிலில் முகம் கருத்துப்போயிருந்தால், இந்த பேஸ்பேக் சருமத்தை பளபளப்பாக மாற்றி விடும்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்