Paristamil Navigation Paristamil advert login

ஈரானில் இஸ்லாமிய குடியரசு வீழவேண்டும்! - பிரெஞ்சு மக்கள் ஆதரவு!!

ஈரானில் இஸ்லாமிய குடியரசு வீழவேண்டும்! - பிரெஞ்சு மக்கள் ஆதரவு!!

5 பங்குனி 2026 வியாழன் 07:00 | பார்வைகள் : 567


ஈரானில் இஸ்லாமிய குடியரசு வீழ்த்தப்பட்டு, அங்கு ஜனநாயக ஆட்சி மலரவேண்டும் என பிரெஞ்சு மக்கள் ஆதரவு கருத்துக்கள் தெரிவித்துள்ளனர்.

பிரெஞ்சு மக்களில் 86% சதவீதமானவர்கள் இந்த கருத்தை தெரிவித்துள்ளனர். 1% சதவீதமானவர்கள் எவ்வித கருத்தையும் தெரிவிக்காத நிலையில், 13% சதவீதமானவர்கள் “ஈரானில் இஸ்லாமிய குடியரசு ஆட்சியை விரும்புகிறோம்!” என தெரிவித்துள்ளனர்.

இந்த கருத்துக்கணிப்பை CNEWS, JDD மற்றும் Europe 1 போன்ற ஊடகங்களுக்கான CSA  நிறுவனம் மேற்கொண்டிருந்தது. இதில் 18 வயது நிரம்பிய 1,010 பேர் பங்கேற்றிருந்தனர். கோட்டா முறையில் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது மேற்கொண்ட முதல் நாள் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா-அலி-காமேனி அவர்கள் கொல்லப்பட்டிருந்தார்.  அதை அடுத்து, ஈரான் யுத்தம் ஆரம்பித்து இன்று ஐந்தாவது நாளாக தொடர்ந்து வருகிறது. இதுவரை 1000 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

5 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026